பாதாம், படுக்கையறை அரசனா?

Advertisement

நட்ஸ் உணவுப் பொருள்களில் மிகவும் ஆரோக்கியமானது பாதாம் என்னும் அல்மாண்ட் ஆகும். ஒரு கிண்ணம், அதாவது ஏறக்குறைய 35 கிராம் பாதாமில் 206 கலோரி ஆற்றல் அடங்கியுள்ளது. கார்போஹைடிரேடு என்னும் மாவுச் சத்து 6 கிராம், புரதம் 7.6 கிராம், நார்ச்சத்து 4.1 கிராம், பூரிதமான கொழுப்பு 18 கிராம், சர்க்கரை 1.7 கிராம் உள்ளது. வைட்டமின்கள் ஏ, பி மற்றும் இ ஆகியவையும் பாதாமில் உள்ளன. கால்சியம் என்னும் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், ஸிங்க் என்னும் துத்தநாகம், பொட்டாசியம், மாலிப்டினம், செலினியம் ஆகிய தாதுக்கள் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை பாதாமில் காணப்படுகின்றன.


மருத்துவ குணங்கள்

பாதாமில் ரிபோஃப்ளேவின் மற்றும் எல்-கார்னிட்டின் ஆகிய இரண்டு முக்கியமான சத்துகள் உள்ளன. இவை மூளை வளர்ச்சிக்கு உதவுவதோடு மூளையின் செயல்திறனை அதிகப்படுத்துகின்றன. புத்திசாலித்தனத்தை அதிகப்படுத்த உதவுவதோடு அல்சைமர் போன்ற மூளை தொடர்பான குறைபாடுகளைத் தடுக்கின்றது. பாதாம் எண்ணெய் நரம்பு மண்டலத்துக்கு நன்மை செய்வதால் மூளையில் நியூரான்கள் புதிதாகத் தோன்றுவதற்கு உதவுகிறது. பாதாமை அப்படியே சாப்பிடுவதோடு இரவு முழுவதும் ஊற வைத்துச் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டுக்கு அதிக நன்மை தரும்.

பாதாமில் சுண்ணாம்புச் சத்தும் (கால்சியம்) பாஸ்பரஸும் அதிகம் காணப்படுகின்றன. இவை எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்தும். மூட்டுகளில் ஏற்படும் வலியிலிருந்தும் பாதாம் நிவாரணம் அளிக்கிறது. பாதாம் பாலில் உள்ள வைட்டமின் இ சத்து மூட்டுகளுக்குத் தேவையான உயவு பொருளினை அளிக்கிறது. இது மூட்டுகள் சேதமுறுவதை தடுக்கிறது. முதியவர்களுக்கு எலும்பு தேய்மானம் அடையாமலும் பாதாம் காத்துக்கொள்ளுகிறது.

இருதய அடைப்பு

பாதாம் பருப்பிலுள்ள வைட்டமின் இ, இருதயத்தில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து, இருதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது. இரத்த தமனிகளின் சுவரைப் பாதுகாத்து, இரத்தம் நன்றாகப் பாய்வதற்கு உதவுகிறது. உடலில் கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதால் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. பாதாம் ஹெச்டிஎல் (High-density Lipoproteins) என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும், எல்டிஎல் (Low-density Lipoproteins) என்னும் கெட்ட கொலஸ்டிராலின் அளவு குறையவும் காரணமாகிறது. இதன் காரணமாக இருதயம் மற்றும் ஈரல் இவை இரண்டும் நன்றாகச் செயல்பட உதவுகிறது. உடலின் நச்சுக்களை நீக்கும் ஈரலின் செயல்பாட்டில் பாதாம் உதவி செய்கிறது.

பாதாமும் படுக்கையறையும்

பொதுவாக நாற்பது வயதுக்குக் குறைவான ஆண்களில் 2 சதவீதத்தினரும், நாற்பது முதல் எழுபது வயது உள்ள ஆண்களில் 52 சதவீதத்தினரும் எண்பது வயதுக்கு மேற்பட்டோரில் 85 சதவீதத்தினரும் விறைப்புத் தன்மை குறைபாடு மற்றும் பாலியல் நாட்டத்தில் குறைபாடுள்ளவர்களாகக் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஸ்பெயினிலுள்ள ரோவிராய் வெர்ஜிலி பல்கலைக்கழகமும் பியர் வெர்ஜிலி சுகாதார ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து இனப்பெருக்க வயதில் உள்ளவர்கள் கொட்டை (Nuts) வகைகளை உண்பது குறித்து ஆய்வு செய்தனர். 83 நபர்களிடம் 14 வாரங்கள் இந்த ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் குறைவாகவும், விலங்கு கொழுப்பு நிறைந்த உணவுப் பொருள்களை அதிகமாகவும் சாப்பிடக்கூடியவர்கள்.

தினமும் வால்நட், பாதாம் போன்ற பருப்புகளை 60 கிராம் சாப்பிட்டு வந்தால் பாலியல் நாட்டம் அதிகரிப்பதோடு தாம்பத்திய உறவின் உச்சக்கட்டம் திருப்தியாகவும் அமையும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

மனக்கலக்கத்துக்கு மருந்து

மன அழுத்தம் மற்றும் மனக்கலக்கம் இரண்டும் இரத்த அழுத்தம் உயர்வதற்குக் காரணமாகின்றன. பாதாமில் அதிக அளவில் காணப்படும் பொட்டாசியம், உயர் இரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தைச் சீராகக் காத்துக்கொள்கிறது.
பால் போல் வெண்மையான சருமம் பாதாம் பருப்பினை தொடர்ந்து சாப்பிட்டால் சருமம் நிறம் பெறும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள வைட்டமின் இ, சருமத்திற்கு ஊட்டம் அளிக்கிறது; சரும பாதிப்பு அண்டாமல் தடுக்கிறது. பாதாம், கூந்தல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. கூந்தல் பலம் பெறுவதற்காகப் பாதாம் எண்ணெய் தேய்க்கலாம். பாதாம் சாப்பிட்டால் கூந்தல் வறண்டு, வெளிறிப் போகாமல், வளமையாகக் கறுப்பாக இருக்கும். கூந்தலில் காணப்படும் ஈறு பிரச்சனையைப் பாதாம் போக்குகிறது.
கர்ப்பிணிகளுக்கு ஏற்றதுகரு வளர ஆரம்பிக்கும் நாள்களில் பாதாம் சாப்பிடுவது முக்கியம். இதிலுள்ள ஃபோலிக் அமிலம் கரு வளர்ச்சிக்கும் புதிய செல்கள் உருவாகிறதிலும் உதவி செய்கிறது. பிறவி குறைபாடுகளைத் தவிர்க்கப் பாதாம் சாப்பிடலாம்.

புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு

பாதாம் பருப்பில் அதிகமாக உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக வைத்து குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். வைட்டமின் இ, பைட்டோகெமிக்கல் மற்றும் ஃப்ளேவானாய்டுகள் அதிகம் இருப்பதால் மார்பக புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதைத் தடுக்கும்.

எடை குறைய உதவும் பாதாம்

ஊற வைத்த பாதாம் உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும். பாதாமிலுள்ள வைட்டமின் இ, உடலில் படிந்திருக்கும் கொழுப்பை இளக்கும். பாதாம் சாப்பிடுவது திருப்தியாக உணரச் செய்வதால் பசி அதிகமாக இருக்காது. அதிக உடல் எடை கொண்டவர்கள், எடை குறைப்பதற்குப் பாதாம் உதவுகிறது.

பாதாம் எவ்வளவு சாப்பிடலாம்?

தினமும் சிறிதளவு பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால் பக்கவிளைவுகள் இருக்காது. அளவுக்கு அதிகமாகப் பாதாம் சாப்பிடுவது பல பக்கவிளைவுகளுக்கும், ஒவ்வாமை பிரச்சனைகளுக்கும் காரணமாகும். அதிகமாகப் பாதாம் சாப்பிட்டால் தேவைக்குக் கூடுதலான தாதுகள், வைட்டமின்கள் உடலில் சேர்ந்து குமட்டல், அடிவயிற்றில் வலி, வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். தினமும் 10 முதல் 15 பாதாம் பருப்புகளைச் சாப்பிடுவது போதுமானது.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>