கருவளையம் உங்கள் அழகை கெடுக்கிறதா ? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

Easy tips for black under eye

Aug 21, 2020, 19:57 PM IST

கண்களுக்கு கீழ் அல்லது கண்களைச் சுற்றி கருமையாக இருப்பதைதான் கருவளையம் என்றுக் கூறுகிறோம். இந்தக் கருவளையம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வேலைப் பளு, தூக்கமின்மை, அதிக நேரம் ஸ்மார்ட் போன் உபயோகிப்பது போன்றக் காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது.

முகத்தின் அழகைக் கெடுக்கும் இந்த கருவளையங்களை வீட்டிலேயே எளிமையான வழிகளில் போக்கிவிடலாம்.
இதோ உங்களுக்கான டிப்ஸ்,

தேங்காய் எண்ணெய்:

இயற்கை தந்த அருமருந்து தேங்காய் எண்ணெய். சருமம் முதல் பல பிரச்சினைக்கு தேங்காய் எண்ணெய் உதவுகிறது. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு கருவளையத்தையும் எளிதாக போக்கலாம்.

தினமும் தூங்குவதற்கு முன்பு சில துளி சுத்தமான தேங்காய் எண்ணெய்யை கண்களை சுற்றி தடவி மசாஜ் செய்யவும்.

இரவு முழுவதும்விட்டு காலை எழுந்து முகத்தை தண்ணீரால் கழுவவும்.
இதுபோன்று தினமும் செய்து வந்தால் கருவளையம் விரைவில் மறைந்துவிடும். கண்களும் பிரகாசிக்கும்.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காய் சருமத்திற்கு மிகவும் நல்லது. வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.

பின் ஒவ்வொரு துண்டையும் கண்கள் மீது வைக்கவும். வெள்ளரிக்காயின் குளிர்ச்சித் தன்மை போனதும் மற்றொரு துண்டை வைக்கவும். இதுபோன்று இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்யவும்.
தினமும் செய்தால் பலன் நிச்சயம்.

எலுமிச்சைப் பழ சாறு:

வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சைப் பழம் பல்வேறு நற்குணங்களை கொண்டது.

தினமும் ஒரு தம்ளர் எலுமிச்சைப்பழ சாறு குடித்து வந்தால் கருவளையம் காணாமல் போய்விடும். இதேபோல், ஆரஞ்சு பழ சாறு பருகுவதும் கருவளையத்தை எதிர்த்து போராடும்.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். ஒவ்வொரு துண்டையும் கண்கள் மீது வைத்து படுத்துக் கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து எடுக்கவும்.
இதுப்போன்று தினமும் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் கருவளையம் நீங்கிடும்.

You'r reading கருவளையம் உங்கள் அழகை கெடுக்கிறதா ? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை