நீங்கள் சிக்கன் சாப்பிடுபவர்களா?உங்களுக்கான ஆரோக்கிய செய்திகள் இதோ!!

chicken benefits in tamil

by Logeswari, Aug 26, 2020, 16:33 PM IST

உணவு என்பது நம் பசியை மட்டும் போக்குவது அல்ல நம் வாழ்க்கையை ஆரோக்கியமாக இருக்க முக்கிய பங்கு வகிக்கின்றது.இவ்வுலகில் அசைவ சாப்பாடை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது அதிலும் அசைவத்தில் சிக்கன் விரும்பிகள் தான் அதிகம்.சிக்கன் சாப்பிடுவதால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கின்றது.இருப்பினும் சிக்கன் சாப்பிடும் முறையை தவறாக கையாண்டால் நிறைய கேடுகளும் விளைவிக்கும்.உடலுக்கு தீமையோ அல்லது நன்மையோ நாம் சாப்பிடும் உணவு முறையில் தான் உள்ளது.

அதுபோல சிக்கனை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை பார்ப்போமோ!!

1.பாடிபில்டர் ஆகணுமா?

சிக்கனில் குறைவான கொழுப்புகளும் அதிகமான புரோட்டீன்களும் உள்ளன.ஆகவே பாடிபில்டர் ஆக விரும்பும் இளைஞர்கள் தண்ணீரில் சிக்கனை வேகவைத்து மசாலா எதுவும் சேர்க்காமல் தினமும் சாப்பிட்டு வந்தால் நீங்கள் தான் மிஸ்டர்.தமிழ்நாடு...

2.பசி உணர்வு உண்டாகனுமா?

ஒவ்வொருவரும் வேலைக்கு செல்வது நிறைவாக உணவை ருசிப்பதற்காக மட்டுமே ஆனால் சிலருக்கு பசி உணர்வு ஏற்படாமல் இருப்பதால் உணவை உண்பதற்கு தடங்கலாக இருக்கும்.இவற்றை உறியடிக்க சிக்கனில் உள்ள ஜிங்க் என்பவையால் பசி உணர்வை தூண்டச்செய்து வயிறு நிறைய உணவை உண்ண செய்கிறது.

3.இதயம் ஆரோக்கியமாக இருக்க வேணுமா?

சிக்கனில் அதிக கொலஸ்ட்ரால் இவை யாவும் அறிந்ததே.ஆனால் அதில் உள்ள நியாசின்,கொலஸ்டாளை குறைக்கின்றது.சிக்கனை பொரித்து உண்பதை தவிர்த்து வேக வைத்து உண்பது உடலிற்கு நன்மை விளைவிக்கும்.

தீமையிலும் நன்மை இருப்பது இயல்பு”.இவற்றை நம் புரிந்து கொண்டு சரியான வகையில் உணவு முறையை கையாண்டால் நம் ஆரோக்கியம் மேல் மேலும் வளரும்...



You'r reading நீங்கள் சிக்கன் சாப்பிடுபவர்களா?உங்களுக்கான ஆரோக்கிய செய்திகள் இதோ!! Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை