பப்பாளியில் இருந்து கிடைக்கும் 5 முக்கியமான ஊட்டச்சத்துக்கள் என்ன??

what is the cause eating papaya

by Logeswari, Sep 2, 2020, 16:22 PM IST

பப்பாளி பழம் சாப்பிட்டால் முகம் பொலிவு அடையும் என்பது யாவரும் அறிந்ததே….ஆனால் இதில் அளவில்லாத மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. செரிமானம் பிரச்சனை,உடல் எடை குறைத்தல்,தேவை இல்லாத கொழுப்புகளை குறைத்தல் என பல வித நன்மைகளை தருகிறது.பப்பாளி பழத்தின் வடிவமே பார்வையாளர்களின் கண்களை பறிக்கும்.பப்பாளி சாப்பிடுவதால் முகம் மற்றும் உடலை குளிர்மையாக வைத்து கொள்கிறது.இதில் உள்ள 5 வகை முக்கியமான நன்மைகளை காணலாம்.

உடலில் உள்ள கொழுப்பை குறைத்தல்:-

பப்பாளியில் இயற்கையாகவே நார்சத்து,விட்டமின் போன்ற சத்துக்கள் உள்ளதால் உடலில் உள்ள தேவை இல்லாத கொழுப்புகளை தனது சாறு மூலம் கரைத்து விடுகிறது.

நீரிழிவு நோயை தடுக்கும் சக்தி:-

மற்ற பழங்களை விட பப்பாளி பழத்தில் சர்க்கரையின் அளவு சற்று குறைந்து காணப்படுகிறது.இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் பப்பாளி பழத்தை உண்பதில் எந்த வித தடையும் இல்லை.இதில் உள்ள விட்டமின் சத்து இன்சுலின் அளவை சீர் செய்வதால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது.

செரிமானம்:-

நம் உண்ட உணவு செரிமானம் ஆகாவிட்டால் உடலில் பெரிய ஆபத்து ஏற்படுத்தும்.பப்பாளியில் உள்ள நார்சத்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது.எண்ணெயில் தயாரித்த உணவை முற்றிலும் குறைத்து கொள்ள வேண்டும்.ஜங்க் ஃபுட் தான் உடலில் நடக்கின்ற செரிமானத்தை தடுக்கிறது.ஆகவே ஜங்க் ஃபுட் மற்றும் எண்ணெய் பொருள்ககளை அறவே நீக்க வேண்டும்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது:-

நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் பப்பாளியை தினமும் தவறாமல் சாப்பிட வேண்டும்.இது பசியை கட்டுப்படுத்தி உடம்பில் உள்ள கலோரிகளை அழிக்கிறது.

வயிற்று வலியை போக்கும்:-

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயால் பயங்கரமான வயிற்று வலி ஏற்படும்.இதில் உள்ள பாப்பேன் என்ற சத்து இரத்த ஓட்டத்தை எளிமைப்படுத்தி வயிற்று வலியை குறைக்கும்.

You'r reading பப்பாளியில் இருந்து கிடைக்கும் 5 முக்கியமான ஊட்டச்சத்துக்கள் என்ன?? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை