மெனோபாஸ் கால பாதுகாப்புக்கு ஆப்பிள் சாப்பிடுங்க!

ஆப்பிள், பார்க்க மட்டும் அழகானவை அல்ல; அவை ஆரோக்கியத்திற்கான ஆயுதம். சில ஆபத்தான உடல்நல குறைபாடுகளை தவிர்க்கும் இயல்பு ஆப்பிளுக்கு உள்ளது. இருதய பாதிப்பு, நீரிழிவு, அல்சைமர் போன்றவற்றை தவிர்க்க விரும்பினால் ஆப்பிள் சாப்பிட வேண்டும்.
சீரான சர்க்கரை அளவு

ஆப்பிளில் ஃப்ரக்டோஸ் என்ற ஒருவகை சர்க்கரையும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பானான (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) பாலிபீனால்களும் உள்ளன. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை சமச்சீராக்குவதுடன் நம் உடல் சர்க்கரையை கிரகித்துக் கொள்ளும் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. ஆப்பிளின் இந்தப் பண்பு நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு நன்மை பயக்கிறது. ஆந்தோசையனின் என்ற ஆக்ஸிஜனேற்ற தடுப்பானே பழங்கள் மற்றும் காய்கறிகளின் சிவப்பு, கருநீலம் மற்றும் நீல நிறங்களுக்கு காரணமாகிறது. இந்த ஆந்தோசையனின் ஆப்பிளில் உள்ளது. இது பரவலாக காணப்படும் வகை 2 நீரிழிவு பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.
எடை குறைப்பு

பெக்டின் என்ற நார்ச்சத்து ஆப்பிளில் உள்ளது. இது உணவிலிருந்து அதிகப்படியான கொழுப்பை உடல் கிரகித்துக் கொள்வதை தடுக்கிறது. இந்த நார்ச்சத்து, செரிப்பதற்கு அதிக நேரம் பிடிக்கும். ஆகவே, ஆப்பிள் சாப்பிட்டபிறகு வேறு தின்பண்டங்களை நாம் நாடுவது குறைகிறது. தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு மற்ற நொறுக்குத் தீனிகளை குறைப்பதால் உடல் எடை குறையும்.
செரிமானம்

ஆப்பிளில் பெக்டின் என்ற நார்ச்சத்தும், மாலிக் என்ற அமிலமும் உள்ளது. பெக்டின் கரையக்கூடிய வகையை சேர்ந்த நார்ச்சத்தாகும். இது உணவு குழலிலிருந்து நீரை ஈர்த்து, ஒருவித பசை போன்ற பொருளை உருவாக்குகிறது. இந்த பசையானது செரிமான வேகத்தை குறைக்கிறது; கழிவுகளை குடல் வழியாக நீக்குகிறது. ஆகவே, செரிமான கோளாறுகள் நீங்குகிறது. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இவை ஏற்படாமல் தடுக்கிறது.
மாதவிடாய் முடிவு

மாதவிடாய் நிற்கக்கூடிய காலத்தில் சிலருக்கு எலும்பு தேய்மானம் ஏற்படும். ஆப்பிளின் தோலில் காணப்படும் பிளோரிசின் என்னும் ஃபேவனாய்டு இதுபோன்ற எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது. எலும்பு தேய்மானத்திற்கு காரணமாகும் ஃப்ரீ ராடிகல்களுக்கு (நிலையற்ற மூலக்கூறுகள்) எதிராக பிளோரிசின் செயல்படுகிறது. பொதுவாக, ஆப்பிள் எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
எல்டிஎல்

எல்டிஎல் என்பது ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் அல்லது கெட்ட கொழுப்பு என்று கூறப்படுகிறது. ஆப்பிளில் உள்ள பெக்டின் நார்ச்சத்தும் ஏனைய ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் பாலிபீனால்களும் எல்டிஎல் கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதோடு, அது ஆக்ஸிஜனேற்றம் அடையும் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. இது இருதய தமனிகள், இருதய தசைகள் மற்றும் இரத்த நாளங்கள் தடிமனாவதை தடுக்கிறது.
மூளை செயல்திறன்

மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்தும் திறன் ஆப்பிளுக்கு உள்ளது. நம் உடலில் நரம்பு செல்கள் மற்றும் மூளைக்கு இடையிலான தகவல் தொடர்பை வலுப்படுத்தும் அஸிட்டில்கொலைன் அதிகமாக உற்பத்தியாகும்படி ஆப்பிள் தூண்டுகிறது. ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டால் அல்சைமர் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். கடைகளில் வாங்காமல், வேறு எந்த பொருளும் சேர்க்காமல் வீட்டில் ஆப்பிள் ஜூஸ் தயாரித்து குடிப்பது நல்ல பலனை தரும்.


ஈறுகள்

ஆப்பிளில் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது. இவை இரண்டும் வாயை சுத்திகரிக்கக்கூடியவை. ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம், உமிழ்நீர் பெருக காரணமாகிறது. உமிழ்நீர் பெருகுவதால் வாயிலுள்ள நுண்கிருமிகள் அகற்றப்படுகின்றன. ஆப்பிளிலுள்ள வைட்டமின்களும் தாது சத்துகளும் பற்களுக்கு ஆரோக்கியமளிக்கின்றன. ஈறுகளை வலுப்படுத்துகின்றன.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?
Tag Clouds

READ MORE ABOUT :