உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொண்டைக்கடலை..

Mar 16, 2018, 13:44 PM IST

கொண்டைக்கடலை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்ப்போமா..

தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

இந்த கொண்டக்கடலை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம்.  மேலும், எடையைக் குறைக்கவும், இதய நோயை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.

ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை உடல் எடை குறைய உதவி புரியும். அதிலும் இதனை தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல், அதனால் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.

ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆந்தோசையனின்கள், டெல்பின்டின், சியானிடின், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் போன்றவை உள்ளது. மேலும் இதில் ஃபோலேட் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இதனால் இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் தங்கி அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறையும்.

ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறையும். அதற்கு தினமும் 3/4 கப் ப்ரௌன் நிற கொண்டக்கடலையை வேக வைத்து சாப்பிட்டு வாருங்கள். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் உள்ள கரையும் நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுன் வைக்கும். மேலும் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இதனால் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடைந்து மெதுவாக செரிமானமாகும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படும். அதிலும் ஒரு வாரம் தினமும் 1/2 கப் கொண்டக்கடலையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

தினமும் இரவில் படுக்கும் போது ப்ரௌன் நிற கொண்டக்கடலையை ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை சாப்பிட்டு வந்தால், அதனால் செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அவை இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பைத் தடுத்து, உடலில் எனர்ஜியை அதிகரிக்கும்.

மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், இரவில் ஊற வைத்த கொண்டக்கடலையை பச்சையாக சாப்பிடுவதோடு, அந்த நீரை குடித்து வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.

You'r reading உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொண்டைக்கடலை.. Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை