இன்சூரன்ஸ் பணத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவி!

இன்சூரன்ஸ் பணத்திற்காக, கள்ளக்காதலுனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரியை சேர்ந்த மாதேசன் [வயது 45]. ஜவுளி வியாபாரியான இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி தர்மபுரி-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் மாதேசன் இறந்து கிடந்தார்.

காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். அவர்கள் மாதேசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. முதலில் மாதேசன் விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து காரிமங்கலம் போலீசார் அவர் வாகனம் மோதி இறந்தாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்தார்களா? விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேவதியின் மூத்த மகன் யோகேஷ் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சென்று தனது தந்தை மாதேசனின் பிரேத பரிசோதனை சான்றை தரும்படி கேட்டுள்ளார். அவனை பிடித்து போலீசார் விசாரித்த போது, தன் தந்தையின் பெயரில் இன்சூரன்ஸ் செய்துள்ளோம். அந்த பணத்தை அலுவலகத்தில் இருந்து பெற தேவைப்படுகிறது, என் அம்மாவாங்கி வரச் சொன்னார் என்று கூறியுள்ளான்.

அதன் பின்பு, யோகேஷ் மற்றும் ரேவதியிடம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. கணவனின் இன்ம்சூரன்ஸ் பணத்திற்காக அவரை கள்ளக்காதலுடன் சேர்ந்துக் கொன்றதாக ரேவதி போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து ரேவதி அளித்துள்ள வாக்குமூலத்தில், தனக்கும், பென்னாகரம் முள்ளுவாடி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்ததாகவும், அதனை ஒருநாள் இருவரையும் ஒன்றாக பார்த்த கணவர் என்னை கடுமையாக அடித்து கொடுமைப்படுத்தியாதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தனது கணவன் பெயரில் ரூ. 55 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பணம் வங்கியில் இருப்பது எனக்கு தெரிய வந்ததையடுத்து, தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களின் துணையோடு, கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், பணத்துக்கு ஆசைப்பட்டு எனது கணவரை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.

 - thesubeditor.com

 

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!