அசரவைக்கும் நாவல் பழத்தின் சத்துக்கள்!!

benefits of indian blue berry

by Logeswari, Oct 1, 2020, 20:14 PM IST

கிராமத்தில் அதிகமான இடங்களில் கொத்து கொத்தாக பூத்து குலுங்கும் நாவல் பழத்தை கண்டு இருப்போம்.அதனை ஆசைக்காக பறித்து உப்பு தூவி சாப்பிடுவோம்.ஆனால் நாவல் பழத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.அதனை நம்ப அறியாமல் சுவைக்காக மட்டும் சாப்பிட்டு வருகிறோம்.தற்பொழுது நாவல் பழத்தின் விற்பனை நகரத்தை தேடி நகர்ந்துள்ளது.விற்பனையும் மேகு சிறப்பாக நடந்து வருகிறது சரி வாங்க நாவல் பழத்தில் உள்ள சத்துக்களை குறித்து பார்ப்போம்..


நீரிழிவு நோயை குணப்படுத்துதல்:-
நாவல் பழத்தை வாரத்தில் ஒரு முறை உண்டு வந்தால் உடம்பில் சர்க்கரையின் அளவை சீர் செய்யும்.இதனை விட நாவல் கொட்டையை வெயிலில் நன்கு காய வைத்து பின்பு அதை மிக்சியில் அரைக்க வேண்டும்.இதனை பொடியாகவும் எடுத்து கொள்ளலாம் அல்லது தண்ணீரில் சேர்த்து கலவையாகவும் எடுத்து கொள்ளலாம்.இவ்வாறு செய்து வந்தால் சர்க்கரை நோயிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
நாவல் பழத்தின் பிற நன்மைகள்;-
நாவல் பழத்தில் சர்க்கரை நோயையை மட்டும் குணப்படுத்தாமல் பற்களில் இரத்த கசிவு,கல்லியிரலை குணப்படுத்துதல் மற்றும் செரிமானப் பிரச்சனை ஆகியவையை நாவல் பழம் குணப்படுத்துகிறது.மேலும் நாவல் பழக் கொட்டை சரும பிரச்சனைக்கும் தீர்வு அளிக்கிறது.

You'r reading அசரவைக்கும் நாவல் பழத்தின் சத்துக்கள்!! Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை