ரத்தத்தை சுத்தப்படுத்த காளான் சாப்பிடுங்கள்..

Mar 23, 2018, 13:50 PM IST

காளான் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. அவற்றை குறித்து கீழே பார்ப்போம்..

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது. மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.  கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலு}ட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

You'r reading ரத்தத்தை சுத்தப்படுத்த காளான் சாப்பிடுங்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை