வயது ஆகினாலே இல்லாத நோய் எல்லாம் வந்து சேரும்.அதிலும் முக்கியமான ஒன்று இரத்த அழுத்தம். இதனை கட்டுப்படுத்த இயற்கை ரீதியான பல வழி முறைகள் உள்ளது. இயற்கை தாவரம் ஆன செம்பருத்தியில் இலை முதல் பூ வரை பல விதமான சத்துக்கள் நிரம்பியுள்ளது. செம்பருத்தியில் வாய் வழியாக உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேல் மேலும் வளரும்.. அல்லது வெளிப்புறமாக தலையில் அரைத்து பூசினால் முடி கொட்டாமல் வளரும். சரி வாங்க இரத்த அழுத்தத்தை குறைக்கும் செம்பருத்தி டீ எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:-
செம்பருத்தி பூ -3
தண்ணீர் - 2 கப்
தேன் -2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு -3 ஸ்பூன்
செய்முறை;-
இந்த டீக்கு தேவையானது செம்பருத்தியின் இதழ்களை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தேவையான தண்ணீர் ஊற்றி அதில் செம்பருத்தி இதழ்களை போட வேண்டும்.
தண்ணீரோடு சேர்ந்து இதழ் நன்றாக கொதித்து தண்ணீரின் நிறம் மாற வேண்டும்.நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
15 நிமிடம் கழித்த பிறகு கடைசியில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டு படுத்தும். இதனை தினமும் தவறாக குடித்து வந்தால் உடனடி தீர்வை பெறலாம். செம்பருத்தில் உள்ள வைட்டமின் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது.