கொரோனா காலம்: வைட்டமின் டி குறைபாட்டை தீர்க்கும் உணவுகள்

by SAM ASIR, Oct 30, 2020, 17:31 PM IST

கொரோனா வைரஸை குறித்த தகவல்கள், அது தொடர்புடைய ஊட்டச்சத்துகளைப் பற்றிய கட்டுரைகளில் வைட்டமின் டி பற்றியும் தவறாமல் குறிப்பிடப்பட்டு வருகிறது. கொரோனா பயத்தின் காரணமாக மக்கள் வெளியே நடமாடுவது குறைந்த நிலையில் 'சூரிய வெளிச்ச வைட்டமின்' என்று அறியப்படும் வைட்டமின் டி குறையும் அபாயம் குறித்த எச்சரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன.

வைட்டமின் டி உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு அத்தியாவசியமானது. வைட்டமின் டி குறைபடுமானால் எலும்பு பலவீனமடைகிறது. இருதயம் தொடர்பான நோய்கள் வரக்கூடும். நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவதோடு சுவாசம் சம்மந்தமான குறைபாடுகளும் வரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கோவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களில் 80 சதவீதத்தினர் வைட்டமின் டி குறைவினாலும் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஸ்பெயின் நடைபெற்ற ஓர் ஆய்வு இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளதுடன் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு வைட்டமின் டியின் அளவு குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வைட்டமின் டி போதுமான அளவில் இருந்தால் கோவிட்-19 பாதிப்புள்ளோருக்குப் பிராணவாயு (ஆக்ஸிஜன்) செலுத்தவேண்டிய கட்டாயம் குறைவு என்றும் ஓர் ஆய்வு கூறுகிறது.

சூரிய ஒளி உடலில்படுவதே வைட்டமின் டி சத்தினை பெற்றுக்கொள்ளப் பெருமளவில் உதவும். அதைத் தவிர வைட்டமின் டி சத்து சில உணவுகளிலும் அடங்கியுள்ளது.

மீன்கள்

மீன்கள் வைட்டமின் டி சத்தின் நல்ல ஆதாரமாகும்.

பால் பொருள்கள்

பால், பாலாடைக்கட்டி மற்றும் பால் சார்ந்த பொருள்களைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது வைட்டமின் டி குறைவை நீக்கும்.

முட்டை மஞ்சள் கரு

பலர் கொழுப்புச் சத்து நிறைந்துள்ளது என்று அஞ்சி முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்க்கின்றனர். அதில் நல்ல அளவில் வைட்டமின் டி உள்ளது. ஆகவே, முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிட வேண்டும்.

தானியங்கள் மற்றும் பழச்சாறு

தானியங்களைச் சமைத்து காலை உணவு சாப்பிடுவது வைட்டமின் டி சத்தினை பெறுவதற்கு ஏற்ற வழியாகும். தானியங்களால் ஆன காலையுணவுடன் பழச்சாறு பருகுதல் வைட்டமின் டி சத்தினை உடலுக்கு அளிக்கும்.

காளான்கள்

காலையுணவு, மதிய உணவு, இரவு உணவு மட்டுமின்றி சிற்றுண்டியாகவும் காளான்களை சாப்பிடலாம். காளான்களில் வைட்டமின் டி2 என்ற சத்து அதிக அளவில் உள்ளது.

You'r reading கொரோனா காலம்: வைட்டமின் டி குறைபாட்டை தீர்க்கும் உணவுகள் Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை