பழங்களில் இயற்கையாகவே ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் தினமும் ஒரு பழத்தை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெரும். அந்த வரிசையில் மூன்று முக்கியமான பழங்களை அற்புத குணத்தை பற்றி பார்ப்போம்.
பப்பாளிப் பழம்:-
பப்பாளிப் பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக குறைந்து வரும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை உண்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். தேனுடன் சேர்த்து உண்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்தப் பப்பாளிப் பழத்தை கூழாகப் பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறியப் பின்பு சுடு நீரால் முகத்தைக் கழுவ, முகத்தில் உள்ள சுருக்கங்கள் மாறி முகம் அழகு பெறும். பப்பாளி விதைகளை அரைத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகள் அழிந்துவிடும்.
ஆரஞ்சு பழம்:-
ஆரஞ்சு பழத்தில் விட்டமின் ஏ, விட்டமின் பி2 அதிகமாக உள்ளது. இதில் சுண்ணாம்பு சத்தும் மிகுதியாக காணப்படுகிறது. இரவில் தூக்கமின்றி கஷ்டப்படுபவர்கள் படுக்க செல்லும் முன் அரை டம்ளர் ஆரஞ்சு பழச் சாறுடன் சிறிது தேனை சேர்த்து சாப்பிட்டால் இரவில் நன்கு தூக்கம் வரும். பல் சதை வீக்கம், பல் சொத்தை, பல் வலி, பல் ஈறுகளில் இரத்தக் கசிவு போன்றவை இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை வைத்து வாய் கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
திராட்சை:-
திராட்சை சாப்பிடுவதை விட அதில் இருக்கும் சாறு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 8 பச்சை அல்லது கறுப்பு திராட்சை பழத்தை எடுத்து அரை மணி நேரம் ஊறவைத்துக் கழுவவும். 1 டம்ளர் தண்ணீர் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும். அந்த கொதித்த நீரில் திராட்சைப் பழங்களைப் போட்டு ஒரு மணி நேரம் ஊறவிட்டால், பழம் பாதி வெந்துவிடும். இவற்றை எடுத்து 3 ஸ்பூன் நீர் விட்டு மத்தால் மசித்து சாறு எடுக்கவும். இந்த சாற்றை வடிகட்டி குழந்தைகளுக்குக் கொடுத்தால் மலச்சிக்கல் பிரச்சனை வராது.