சுவாசிக்க ரொம்ப கஷ்டப்படுகிறீர்களா?? அப்போ இது உங்களுக்கான குறிப்பு ..

நுரையீரலில் அளவு கடந்த சளி, தூசி சேர்வதால் சுவாசிக்க மிகவும் கடினமாக இருக்கும். இதனின் விளைவாக ஆஸ்துமா, சுவாச பிரச்சனை ஆகியவை ஏற்படுகிறது. பருவ காலம் மாறும் பொழுது சளி பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனை குணப்படுத்த பாட்டி வைத்தியமான பூண்டு பால் உதவுகின்றது. இது நுரையீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சிறந்த ஓர் நிவாரணியாக செயல்படும். திடீரென்று சளி மற்றும் காய்ச்சல் வந்தால் பூண்டு சேர்த்தப் பாலைக் குடிப்பதால் உடனடி நிவாரணம் கிடைக்கும். சரி வாங்க பூண்டு பால் தயாரிக்கும் முறை குறித்து பின்வருமாறு காணலாம்.

தேவையான பொருள்கள்:-
பால்- 1 லிட்டர்
பூண்டு -தேவையான அளவு
பனங்கற்கண்டு -தேவையான அளவு
மிளகுத் தூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - தேவையான அளவு
தேன் - 1 ஸ்பூன்
இஞ்சி - தேவையான அளவு

செய்முறை:-
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பால் ஊற்றி அதில் தோல் உரித்த பூண்டு,பனங்கற்கண்டு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து பாலை ஒரு 20 நிமிடம் நன்றாக கொதிக்க விட வேண்டும்.

நன்கு சுண்டிய பதத்தில் வரும் பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும்.பிறகு கொதிக்க வைத்த பாலை வடிகட்டி அதில் பெருங்காயம் மற்றும் தேவையான அளவு தேன் ஆகியவை சேர்த்து பருக வேண்டும். திப்பியில் சேர்ந்த பூண்டை அப்படியே சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பெருங்காயம் சேர்ப்பதால் செரிமானம்,வறட்டு இருமல்,ஆஸ்துமா,மார்பு சளி,சுவாச கோளாறு போன்ற பிரச்சனைகளை குணமாக்கும் அற்புதமான மருந்து பொருளாகும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?
Tag Clouds

READ MORE ABOUT :