கொரோனாவின் முதல் எதிரி முருங்கைக்காய்..!

by Balaji, Nov 5, 2020, 19:51 PM IST

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவில் முதலிடம் பிடித்துள்ளது முருங்கை. இதன் மூலம் கொரானாவின் முதலில் எதிரியாகவும் முருங்கை உருவெடுத்துள்ளது.சமீபகாலமாக ஆண், பெண், ஏழை, பணக்காரன், விவசாயி முதல் விஐபி வரை பலதரப்பட்ட மக்களையும் பீதிக்கு உள்ளாக்கிய ஒற்றைச் சொல் கொரோனா.

இந்த கொரோனா என்ற கொடிய வைரஸ் வராமல் தடுக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகம் இருந்தால் கொரோனா தொற்று அண்டாது என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொரோனாவின் பிடியில் சிக்காமல் தப்பிக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி யை அதிகரிக்க இயற்கை உணவுகளை உண்பது அவசியம். உலக சுகாதார நிறுவனமும் இதனையே வலியுறுத்துகிறது.

அப்படி பல தரப்பும் பரிந்துரை செய்துள்ள இயற்கை உணவுகளில் ஒன்று தான் முருங்கைக்கீரை. நாம் அன்றாடம் வீடுகளிலும், தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும், காடுகளிலும் வளரும் முருங்கை மரம் எவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு மாமருந்து என்பது கொரோனாவுக்கு பின்னர்தான் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

வைட்டமின்-ஏ சத்து கேரட்டில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகமாக முருங்கையில் உள்ளது. வைட்டமின் பி2 வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது. வைட்டமின் பி3 வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது. பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக கால்சியம் சத்தும் புரோட்டீன் சத்து இரண்டு மடங்கும் அதிகமாக முருங்கையில் உள்ளது.

முருங்கையில் மெக்னீசியம் சத்து முட்டையில் உள்ளதைவிட ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது. அதனால் தான் எந்த மாதிரி கொடிய வைரசையும் சமாளிக்கும் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் முருங்கை முதலிடம் வகிக்கிறது. போதிய நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

முருங்கைக்கீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால் நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு உயர்த்திக் கொள்ளலாம். முருங்கைக்கீரை சூப் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக கிடைக்கிறது. முருங்கைக்காய் சாப்பிட்டால் கம்பு ஊன்றி செல்லும் கிழவன் கூட கைவீசி நடப்பான் என்பது பழமொழி.

You'r reading கொரோனாவின் முதல் எதிரி முருங்கைக்காய்..! Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை