கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் தமிழ் நெடில் எழுத்துக்கள் கண்டுபிடிப்பு: மத்திய தொல்லியல் துறை தகவல்

ஈரோடு மாவட்டம் கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் தமிழ் நெடில் எழுத்துக்களான ஆ, ஈ போன்ற எழுத்துக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது

by Balaji, Nov 5, 2020, 19:08 PM IST

கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற 12 பொருட்களை வயது மற்றும் காலங்களைக் கண்டுபிடிக்க அதன் கார்பன் டேட்டிங் அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வு மையத்திற்கு அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் வயதை கார்பன் டேட்டிங் முறையில் கணித்த போது கிமு 696 to கிமு 540 என்றும் கிமு 906 முதல் 805 எனத் தெரிய வருகிறது.இதற்கான பணிகளை 10 நாட்களில் செய்யவும் இதற்கான தொகையைத் தமிழக அரசு உடனடியாக வழங்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தமிழ் தொல்குடிகள் வாழ்ந்ததை ஆதாரங்களுடன் உறுதி செய்ய உதவும் வகையில், கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்கள், சிவகளை, கொந்தகை கிராமங்களில் அகழாய்வு நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தொல்லியல் துறை தரப்பில்,ஆதிச்சநல்லூர், புலிகட்டு, மலையடிப்பட்டி, கீழடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் அறிக்கைகளைத் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அறிக்கைகள் வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

தொல்லியல் துறை தரப்பில், கொடுமணல் அகழாய்வில் 96 பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் 356 தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளில் நெடில் எழுத்துக்கள் கிடைத்ததில்லை. ஆனால், கொடுமணல் அகழாய்வில் நெடில் எழுத்துக்களான ஆ, ஈ என்ற எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற 12 பொருட்களை சோதனைக்கு உட்படுத்த, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு அனுப்பவும், அதற்கான தொகையைத் தமிழக அரசு உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டனர். தொடர்ந்து கல்வெட்டுகளைப் படிமம் எடுப்பது தொடர்பான நிலை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, " இதுவரை 11 ஆயிரம் கல்வெட்டுகள் படிவம் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ் கல்வெட்டுகளில் பல 15 அடிக்கு மேலாக இருப்பதால் அவற்றை படிமமெடுப்பதில் சிரமம் உள்ளது.

அதற்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட புராதான பகுதிகளாக 92 இடங்கள் உள்ள நிலையில் புதிதாக 54 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட. பொருட்களின் வயதை கார்பன்டேட்டிங் முறையில் கணித்த போது, கிமு 696 to கிமு 540 என்றும் கிமு 906 முதல் 805 எனத் தெரிய வருகிறது என மத்திய தொல்லியல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் அதிகமான எழுத்துக்கள் , கல்வெட்டுகள் தமிழ் மொழியைச் சார்ந்தவை என மத்திய தொல்லியல் துறை தகவல் சார்பில் தெரிவிக்கப்பட்ட போது அப்படி உள்ள சூழலில் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில், மதுரை யானைமலை பகுதி சமணசமய அடையாளமாகக் கருதப்படும் நிலையில், அங்குப் புதிதாக, சிமெண்டாலான வழிபாட்டு அடையாளங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவற்றை உடனடியாக அகற்றவும், பழங்கால சின்னங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You'r reading கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் தமிழ் நெடில் எழுத்துக்கள் கண்டுபிடிப்பு: மத்திய தொல்லியல் துறை தகவல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை