தினமும் இனிப்பு எடுத்து கொண்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னன்னு தெரியுமா??

by Logeswari, Nov 17, 2020, 19:27 PM IST

இனிப்பு சாப்பிடும் போது தெரியாது.. அதில் எவ்வளவு பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது.. தெரிந்தால் நாம் இனிப்பை தொட்டு கூட பார்க்க மாட்டோம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் மட்டும் தான் இனிப்பு சாப்பிட கூடாது என்பதில்லை. உடல் எடை குறைப்பவர்கள், ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்கள் அனைவரும் இனிப்பில் இருந்து கொஞ்சம் தள்ளி தான் இருக்க வேண்டும். சிலருக்கு இனிப்பு சாப்பிடவில்லை என்றால் மயக்கம் வருவது போல் இருக்கும் அவர்கள் இனிப்புக்கு சொந்தமாகி விட்டார்கள் என்பது அர்த்தம். அவர்களை இனிப்பிடம் இருந்து பிரிப்பது கடினம்... சரி வாங்க இனிப்பு சாப்பிடுவதால் மேலும் நம் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்..

உடல் எடை அதிகரித்தல்:-
அதிகமாக இனிப்பு வகைகளை சாப்பிடுவதால் பல வித நோய்களை தருகிறது. அதலில் முக்கியமான ஒன்று உடல் எடையை அதிகரித்தல் ஆகும். இனிப்பு சாப்பிட்டால் இடுப்பு, கை,தொடை போன்ற இடத்தில் தேவையில்லாத கொழுப்புகள் உருவாகும். தினமும் உடலுக்கு 300 மில்லி கொழுப்புகள் போதுமானது. இதை தாண்டி செல்லும் பொழுது அவை தேவை இல்லாத கொழுப்பாக மாறிவிடுவதால் உடல் எடை கிடு கிடுவென உயருகிறது. டயட் மற்றும் உடற்பயிற்சி பின்பற்றியும் எப்படி குண்டாகிறோம் என்பது சிலருக்கு கேள்வி குறியாக இருக்கும். அது முழுக்க முழுக்க இனிப்பு சாப்பிடுவதால் மட்டுமே ஏற்படும் மாற்றங்கள் ஆகும். ஆதலால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இனிப்பை அறவே நீக்க வேண்டியது அவசியம்..

நீரிழிவு நோய்:-
இந்த நோய் அனைவருக்கும் தெரிந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடம்பில் ஏற்கனவே இன்சுலின் சுரப்பி வேகமாக செயல்படும். அப்படி இருக்கும் பொழுது நாமும் இனிப்பை உண்டால் என்ன ஆகும்?? சர்க்கரையின் அளவு அதிகமாக்கி கடைசியில் கால்,கை போன்றவற்றை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் சிலரின் உயிருக்கு கூட ஆபத்து விளைவிக்கும். கடைசியில் இதய நோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே மருத்துவரின் ஆலோசனைப்படி டயட் சார்ட்டை மாற்றி அதை சரியாக பின்பற்றவும்.

பற்களை பாதிக்கும்:-
குழந்தைகள் சிறு வயதில் இருக்கும் பொழுது சாக்லேட் சாப்பிட கூடாது என்பதற்காக குழந்தைகளிடம் சாக்லேட் சாப்பிட்டால் பற்கள் சொத்தை ஆகி விடும் என்று சொல்லி அவர்களை பயமுறுத்துவது வழக்கம். ஆனால் இது முற்றிலும் உண்மை. இனிப்பு சாப்பிடுவதால் பற்களில் கண்ணுக்கு தெரியாத புழுக்களை உருவாக்கி பற்களை பாதிக்கிறது. அதுவும் சிலர் இரவில் இனிப்பை சாப்பிட்டுவிட்டு பற்களை சுத்தம் செய்யாமல் உறங்கி விடுவார்கள். அது மிகவும் தவறான ஒன்று. உறங்கும் வேளையில் ஏகப்பட்ட புழுக்கள் நம் பற்களை சூழ்ந்து ஈறுகளை பலவீனம் செய்கிறது. இதனால் பற்கள் விரைவில் எடுக்க கூடிய சூழல் ஏற்படும். ஆதலால் இரவில் இனிப்பு உண்டவுடன் பற்களை சுத்தம் செய்வது அவசியம்.

You'r reading தினமும் இனிப்பு எடுத்து கொண்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னன்னு தெரியுமா?? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை