செம்பருத்தி சீரியல் ஐஸ்வர்யா கொடுத்த அதிரடி பேட்டி..கொந்தளித்த ரசிகர்கள்..

by Logeswari, Nov 17, 2020, 19:30 PM IST

தனியார் தொலைக்காட்சியில் மூன்று வருடங்களாக நம்பர் 1 சீரியலாக புகழ் பெற்றது செம்பருத்தி. இது பல முன்னணி சீரியல்களை பின்னுக்கு தள்ளி எப்பவும் முதல் இடத்தில் இருந்து வருகிறது. ஆபீஸ் சீரியலில் நடித்து பிரபலமான கார்த்திக் நடுவில் பல தோல்விகளை சந்தித்து வந்தார். இவரின் தோல்விக்கு தீனி போடுவது போல் கிடைத்து தான் செம்பருத்தி சீரியல். இதலில் இவர் ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக புதுமுகம் ஷபானா என்பவர் நடிக்கிறார். இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை நம்பர் 1 அந்தஸ்தை யாருக்கும் விட்டுத்தராமல் தக்க வைத்து வருகிறது. கோடிஸ்வர குடும்பத்தில் பிறந்த ஆதி சமையல்கார பெண்ணான பார்வதியை தாயிக்கு தெரியாமல் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

ஆதியின் அம்மா பார்வதியை மூத்த மருமகளாக ஏற்று கொள்வாரா என்பது தான் மீதி கதை. இச்சீரியலில் நடிக்கும் ஆதி பார்வதி காம்பினேஷன் மக்களை அதுவும் குறிப்பாக இளஞர்களை மிகவும் கவர்ந்து விட்டது. இருவருக்குள் நிகழும் ரொமான்ஸ் சீன்கள் இது வரை எந்த சீரியலும் அடையாத ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த சீரியலில் இருந்து தான் புதினா டீயும் பிரபலம் ஆனது. இது போல செம்பருத்தி சீரியலை பற்றி கூறிக்கொண்டே போகலாம். இதே சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. அந்த கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகையான ஜனனி என்பவர் நடித்திருந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு ஜனனியை சீரியலில் இருந்து தூக்கி வேறொருவரை ஆள் மாற்றினர். இதனால் மிகவும் மனம் உடைந்த ஜனனி அவரது தனிப்பட்ட சேனலில் கதறி அழுது அவரது வருத்தத்தை மக்களுக்கு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இவர் செய்தியார்களிடம் கொடுத்த பேட்டியில் முதலில் சீரியலை விட்டு ஆதியை தூக்க வேண்டும் என்று அதிரடியாக பதிவு செய்திருந்தார். அவருக்கு சின்ன திரையில் நடிக்க கொஞ்சம் கூட விருப்பம் இல்லை எனவும் அவருக்கு திரைப்படத்தில் நடிப்பதே ஆசை என்பதை குறிப்பிட்டு இருந்தார். இதனால் அதி-பார்வதி ரசிகர்கள் கொந்தளித்து ஜனனியை வெச்சி செய்து வருகின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை