இளமையான தோற்றம் நீடிக்கவும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவுகிறது எது தெரியுமா?

by SAM ASIR, Nov 22, 2020, 20:56 PM IST

பேரீச்சம்பழம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக விரும்பி உண்ணப்படுவதாகும். இதற்கு குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாகவும் அப்போதிருந்தே நம்பப்பட்டு வருகிறது. பேரீச்சம்பழத்தின் ருசி காரணமாக அதை சாப்பிட அனைவரும் விரும்புகிறோம். அறிவியல்ரீதியாகவும் பேரீச்சம்பழத்தின் பயன்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. முற்காலத்தில் பேரீச்சம்பழத்தை பயன்படுத்தி ஒயின் தயாரிக்கப்பதில் எகிப்து பெயர் பெற்றிருந்தது. தற்போதைய ஈராக் தேச பகுதியிலிருந்தே பேரீச்சை மரம் மற்ற இடங்களுக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சுவைமிகுந்த பேரீச்சை உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மை செய்கிறது.

கொலஸ்ட்ரால்
பேரீச்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. மிகுந்த குறைந்த அளவு கொழுப்பே அதில் உள்ளது. தினமும் சிறிதளவு பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டால் கொலஸ்ட்ரால் குறைவதோடு, உடல் எடை குறையுவும் உதவும்.

புரதம்
உடலில் அதிகம் புரதம் (புரோட்டீன்) சேர வேண்டுமானால் பேரீச்சம்பழம் சாப்பிடவேண்டும். பேரீச்சை நம் தசைகளை வலுவாக்குகிறது. உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி செய்வோரை தினமும் சில பேரீச்சம்பழங்களை சாப்பிட பயிற்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வைட்டமின்கள்
பலர் உடல் ஆரோக்கியத்திற்காக வைட்டமின் துணை உணவுகளை சாப்பிடுகிறோம். பேரீச்சையை தினமும் சாப்பிட்டால் வைட்டமின்கள் இயற்கையாகவே உடலில் சேரும். பி1, பி2, பி3, பி5, ஏ1 மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் பேரீச்சம்பழத்தில் உள்ளன. பேரீச்சம்பழத்தில் இயற்கை சர்க்கரையான குளூக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் ஆகியவை உள்ளன. ஆகவே, பேரீச்சை உடலுக்கு நல்ல ஆற்றலை தருகிறது.

எலும்பு
எலும்பு புரை என்ற எலும்பு அரிப்பு பலவீனத்தால் பலர் பாதிக்கப்படுகின்றனர். பேரீச்சம்பழத்தில் செலினியம், மாங்கனீசு, செம்பு (காப்பர்), மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உள்ளன. இவை எலும்பின் ஆரோக்கியத்திற்கு அவசியம். தொடர்ந்து பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் எலும்பு அரிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

நரம்பு மண்டலம்
பேரீச்சம்பழத்தில் சிறிதளவு சோடியம் இருக்கிறது. ஆனால் அதிக அளவில் பொட்டாசியம் காணப்படுகிறது. பொட்டாசியம் நரம்பு மண்டலத்தை காப்பதற்கு உதவுகிறது. கொலஸ்ட்ராலை குறைப்பதால் பக்கவாதம் போன்ற கொடிய பாதிப்புகள் வராமல் தடுக்கிறது.

இரும்பு சத்து
பற்களை பாதுகாப்பாக வைக்கக்கூடிய ஃப்ளூவோரின் பேரீச்சையில் உள்ளது. இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு பேரீச்சம்பழம் சாப்பிடும்படி பரிந்துரைப்பார்கள். இரும்பு சத்து அதிகம் குறைந்தால் இரத்தசோகை பாதிப்பு ஏற்படும். அசதி, மூச்சிரைப்பு, நெஞ்சில் வலி ஆகியவை இதன் காரணமாக ஏற்படக்கூடும். பேரீச்சம்பழம் இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

செரிமானம்
தினமும் சில பேரீச்சம்பழங்களை நீரில் ஊற வைத்து மென்று சாப்பிட்டால் செரிமான மண்டலம் நன்கு செயலாற்றும். பேரீச்சம்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் சாப்பிட்டு நிவாரணம் பெறலாம்.

முதுமை
பேரீச்சம்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் டி ஆகியவை சருமத்திற்கு மீட்சிதன்மையை தக்கவைக்க உதவுகின்றன. தொடர்ந்து பேரீச்சை சாப்பிட்டு வந்தால் உடலில் மெலனின் தங்குவதை தடுக்கும். ஆகவே, முதுமை தோற்றம் ஏற்படாது.

More Health News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை