மகிழ்ச்சிக்கும் உணவுக்கும் சம்பந்தம் உண்டு..

by Balaji, Nov 26, 2020, 10:55 AM IST

நாம் உண்ணும் உணவு உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நமது மனநிலையையும் கட்டுப்படுத்துகிறது என்றால் வியப்பாக இருக்கும். மோசமான உணவுக்கும் கவலை மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட மனநல கோளாறுகள் ஏற்படுவதற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்கிறது ஒரு ஐரோப்பிய மனோதத்துவ ஆய்வு.

உணவுக்கும் மனநல ஆரோக்கியத்துக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. இதனை மனச்சோர்வு மற்றும் வைட்டமின் B12 குறைபாட்டால் ஏற்படும் தாக்கத்திலும் உறுதிப்படுத்த முடியும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். ஒரு நபரின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவர் தன் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் குறித்து நிபுணர்கள் பரிந்துரைப்பது இதுதான்.

வாழைப்பழம் தான் எப்போதும் சிறந்தது

மூளையில் சுரக்கும் செரோடோனின் என்ற அமிலம் அளவு குறைவது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். வாழைப்பழங்களில் Tryptophan என்கிற அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. இதுவே செரோடோனின் நரம்பியல் கடத்தியாக மாற்றப்படுகிறது. இந்த செரோடோனின் நமது நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சி போன்ற உணர்வுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வாழைப்பழங்களை அதன் சாப்பிடுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் என்பது இந்த நிபுணர்களின் சிபாரிசு

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்..

மீன் எண்ணெய்யில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உண்டு. இந்த கொழுப்பு அமிலம் மனச்சோர்வினை எதிர்த்துப் போராடும் விளைவுகளைத் தூண்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சைவ உணவு உண்பவர்கள் இந்த கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள ஆல்கா தாவர எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். இது மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது.

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவைச் சாப்பிட்டால் சில மணி நேரங்களுக்கு முழுமையான ஆற்றலைப் பெற்றதுபோல உணரலாம். அதுபோல மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவற்றைக் கையாளுவதற்கு மெக்னீசியம் அவசியம். மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து உங்கள் குடலுக்குள் இருக்கும் காரவகை உணவு மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதுடன் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. குடல் ஆரோக்கியம் ஒருவரின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இந்திய ஜின்ஸெங் அல்லது குளிர்கால செர்ரி என்று அழைக்கப்படுகிற அஸ்வகந்தா(Ashwagandha), பிராமி(Brahmi) ஆகியவை மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க உதவும் மருத்துவப் பண்புகளைக் கொண்டிருக்கிறது. அஸ்வகந்தா மற்றும் பிராமி போன்றவற்றைக் கொழுப்புச் சத்துள்ள பொருட்களான பால், தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யில் கலந்து சாப்பிடலாம். இந்த நெய் அல்லது எண்ணெய் பிடிக்காதவர்கள் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். அஸ்வகந்தாவின் வேர் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைச் சமாளிக்க உதவுவதுடன் , மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவை உயர்த்துகிறது. இதன் மூலம் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நட்ஸ் ..

பூசணி விதைகள், முந்திரி, வேர்க்கடலை போன்ற பிற கொட்டை வகைகள், விதைகள் மற்றும் பயறு வகைகளில் மெக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இச்சத்துத் தசைகள் தளர்வடைய உதவுவதோடு மனநிலையையும் உறுதிப்படுத்துகிறது. இதன் மூலமாகவும் மனநல ஆரோக்கியம் மேம்படுகிறது.

மனச்சோர்வுக்கு அடிப்படையாகப் பல காரணங்கள் இருக்கலாம். தைராய்டு பிரச்சனை உடையவர்களுக்கும் மனச்சோர்வு ஏற்படலாம். இதுபோன்று மனச்சோர்வுக்கான காரணங்கள் வேறுபடலாம். எனவே, அதற்குரிய காரணங்களை அறிந்து கொள்வதன் மூலம் அதற்கேற்ற உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து அருந்த வேண்டும். பால் மற்றும் தயிர் போன்ற பால் சார்ந்த பொருட்களில் அதிக மாக உள்ள அயோடின் சத்து மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை வெல்ல உதவுகிறது.

மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள்

இனிப்பு சேர்க்கப்பட்ட உணவு மற்றும் பானங்களை எடுத்துக் கொள்ளும் மக்களில் பலர் மனச்சோர்வு அறிகுறிகளுடன் இருப்பதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதேபோல் மது அருந்துபவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதோடு அவர்கள் தொடர்ந்து மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.நாம் தினமும் அருந்துகிற டீ, காபி போன்றவற்றில் உள்ள கஃபைன் என்கிற பொருள் நமது மூளையில் உள்ள செரடோனின் அளவைக் குறைக்கிறது. இது கவலையை அதிகமாக்குவதுடன் அதைத் தூண்டக்கூடிய வகையிலும் இருக்கிறது. எனவே இத்தகைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் ஊட்டச் சத்து நிபுணர்கள்

You'r reading மகிழ்ச்சிக்கும் உணவுக்கும் சம்பந்தம் உண்டு.. Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை