எடையை குறைக்கணும்னு ட்ரை பண்றீங்களா? படுக்கிறது முன்னால இதை குடிங்க!

உடல் எடையை குறைப்பதற்கு பல முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். சிரமத்தை பாராமல் பல செயல்களில் ஈடுபடுவோம். அவற்றுடன் இரவு உறங்க செல்லும் முன்னர் நாம் எதை அருந்துகிறோம் என்பதையும் கவனிக்கவேண்டும். வழக்கமாக, ஆழ்ந்து உறங்கவேண்டும் என்பதற்காக சில உணவு பொருள்களை சாப்பிடுவதை தவிர்ப்போம்; சில பானங்களை அருந்தமாட்டோம். சில குறிப்பிட்ட பானங்களை அருந்தினால் உறக்கம் நன்றாக வருவதுடன் உடல் எடையை குறைக்கவும் அவை உதவும் என்று கூறப்படுகிறது.

இலவங்கப்பட்டை டீ
படுக்கைக்குச் செல்லும் முன்பு பட்டை போட்டு டீ தயாரித்து அருந்தலாம். இலவங்கப் பட்டை சேர்க்கப்பட்ட டீ, உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்; செரிமானத்தை எளிதாக்கும். இவற்றோடு, உடல் எடை அதிகரிப்பதை இது தடுக்கும்.

அலோ வேரா ஜூஸ்
அலோ வேரா என்னும் கற்றாழை சாற்றினை தூங்க செல்லும் முன்பு அருந்தலாம். இரவில் அலோ வேரா ஜூஸ் பருகினால் அதிகப்படியான கொழுப்பு இயற்கையாகவே கரையும். கற்றாழையில் வைட்டமின் பி சத்து உள்ளது. வைட்டமின் பி சத்து உடலிலுள்ள கொழுப்பினை ஆற்றலாக மாற்றி கரைக்கிறது. அதன் காரணமாக உடல் எடை குறைய உதவுகிறது.

மஞ்சள் பால்
பாலில் மஞ்சள் தூள் சேர்த்து அருந்துவதை கேள்விப்பட்டிருப்போம். மஞ்சளில் நார்ப்பொருள் உள்ளது. இது உடல் எடை அதிகரிப்பதை தடுப்பதுடன், உடலிலுள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது. இரவில் உறங்கச் செல்லும் முன்பு பாலில் மஞ்சள் சேர்த்து அருந்தினால் சுகமான உறக்கம் வருவதுடன் காலப்போக்கில் உடல் எடையை குறைக்கவும் உதவும்.

சாமந்தி டீ
சாமந்தியில் கால்சியம் (சுண்ணாம்பு சத்து), பொட்டாசியம் மற்றும் ஃப்ளவனாய்டுகள் உள்ளன. இது வயிற்று உப்பிசத்தை தவிர்க்க உதவுவதுடன் உடல் எடை கூடுவதையும் தடுக்கிறது. படுக்கைக்குச் செல்லும் முன்னர் சூடாக சாமந்தி டீயை அருந்தினால் மனம் இலேசாகும்; இரவு உறக்கம் நலமாகும்.

வெந்தய நீர்
வெந்தயத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை அருந்துவது உடல் எடையை குறைக்க உதவும். வெந்தய நீர், உடல் வளர்சிதை மாற்றத்தை (மெட்டாபாலிசம்) தூண்டுவதுடன் செரிமானத்தையும் வேகப்படுத்துகிறது. பசியை அடக்கும் ஆற்றல் வெந்தய நீருக்கு உண்டு. பசி அடங்குவதால் உடல் எடை குறையும்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :