இரவில் தூங்காமல் கொட்ட கொட்ட முழித்து இருக்கிறீர்களா?? அப்போ இது உங்களுக்கான செய்தி..

by Logeswari, Dec 7, 2020, 20:45 PM IST

நாளுக்கு நாள் விலைவாசி ஏறிக்கொண்டே கொண்டே போகிறது இப்படி இருக்கும் காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இரு பாலினமே வேலைக்கு செல்ல வேண்டிய சூழலில் தள்ளப்பட்டு இருக்கோம். வேலையில் உள்ள பளுவால் சரியான நேரத்திற்கு சாப்பிட முடியாமல், சரியான நேரத்தில் தூங்கமுடியாமல் தவித்து வருகின்றனர். சரியான நேரத்தில் சாப்பிட்டால் மட்டுமே நிம்மதியான துக்கம் பெறமுடியும். அது மட்டும் இல்லாமல் சிலர் இரவிவில் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு பகலில் நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை. இதனால் மனசோர்வு, மன அழுத்தம் ஆகியவையில் சிக்கி தவிக்கின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியம். அப்பொழுது தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

இரவில் நிம்மதியான தூக்கத்திற்கு சில குறிப்புகளை காணலாம்:-

தூங்க போவதுக்கு முன் சூடான பாலை தினமும் குடித்து வந்தால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம். தினமும் ஒரு கப் நிறைய செர்ரிகளை சாப்பிட்டால் அதில் உள்ள மெலடோனின் சக்தி இரவில் சரியான நேரத்தில் தூங்க தூண்டுதலாக இருக்கும்.

ஆளிவிதைகளில் உள்ள பொட்டாசியம் மன அழுத்ததை குறைத்து சரியான தூக்கத்திற்கு உதவுகிறது. இதனை ஒரு நாள் விட்டு தொடர்ந்து உண்டு வந்தால் கூடிய விரைவில் பலன் கிடைக்கும். வாழைப்பழம் அதிக ஆரோக்கியத்தை உள்ளடக்கியுள்ளது.

இதில் உள்ள மெக்னீசியம் போன்ற சத்தால் மலச்சிக்கல், தூக்கமின்மை ஆகியவற்றை குணப்படுத்தும். பாதாமிளும் மெக்னீசியம் சத்தியுள்ளதால் தூக்கத்தை மேன்மைப்படுத்தும். தினமும் ஊறவைத்த பாதாமை சாப்பிட்டால் இனிமையான தூக்கம் பெறுவீர். முக்கியமாக தூங்குவதற்கு முந்தைய 1 மணி நேரம் போனை உபயோகபடுத்த கூடாது.

You'r reading இரவில் தூங்காமல் கொட்ட கொட்ட முழித்து இருக்கிறீர்களா?? அப்போ இது உங்களுக்கான செய்தி.. Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை