காய்கறிகளும் பழங்களும் விந்தணு உற்பத்திக்கு உதவும்... ஆண்களே மறந்துடாதீங்க!

காய்கறிகளும் பழங்களும் விந்தணு உற்பத்திக்கு உதவும்... ஆண்களே மறந்துடாதீங்க!

by Kumaresan, Nov 25, 2017, 11:14 AM IST

னித உடலுக்கு சக்தி தேவை என்று கூறி நாம் சாதாரணமாக சாப்பிட்டுவரும் உணவுகள் சில ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையைகுறைத்து குழந்தைபேறு இல்லாமல் போகச் செய்யும் அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்துள்ளது.

காய் கறிகள் விந்தணு உற்பத்திக்கு உதவும்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாடுகளில் பரவலாக செயல்பட்டுவந்த செயற்கை கருத்தரிப்பு மையங்கள் சமீப காலமாக இந்தியாவின்பெருநகரங்கள் மட்டுமல்லாது சிறுநகரங்களிலும் பரவி விட்டது. இதற்குகாரணம் திருமணம் முடிந்த தம்பதிகளில் பலருக்கு பல ஆண்டுக்குபிறகும் குழந்தை பிறக்காமல் போவதுதான் காரணம். இந்த பிரச்சனைவீடுகளில் எழும் போது ஆண்கள் பொதுவாக கையை நீட்டுவது தம்மனைவியரை நோக்கி தான். தனக்கு எந்த குறையும் இல்லை என்றும்வாழ்க்கைத்துணைவி மீது எளிதாக பழி போடும் ஆண்கள், பல்வேறுநிர்ப்பந்தங்களுக்கு பிறகு இம்மாதிரி செயற்கை கருத்தரிப்பு மையங்களைஅணுகும் போது அவர்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளின் முடிவுஅதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்.

ஏனென்றால், ஆண்களின் விந்துவில் இருக்கும் உயிரணுக்களின்எண்ணிக்கையை பரிசோதிக்கும் போது அவர்களுக்கு ஒரு பெண்ணைதாய்மை அடையச் செய்ய தேவையான அளவுக்கு வெகு குறைவானஎண்ணிக்கையில் உயிரணுக்கள் இருப்பது பரிசோதனையில்உறுதியாகும். இந்த பாதிப்பு சாப்பிடும் உணவுமுறையின் ஒருநேரடிவிளைவாக இருப்பதாக பல்வேறு அறிவியல்பூர்வமான ஆய்வுகள்தெரிவிக்கின்றன.ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும்அதன் தரத்தை பொறுத்தவரையில் உணவுமுறை ஒரு முக்கிய பங்குவகிக்கிறது என்பது இந்த ஆராய்ச்சியில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.இறைச்சி மற்றும் பால் சார்ந்த உணவுகள் உடலை பெருக்கச் செய்வதுமட்டுமல்லாது உயிரணுக்களின் மொத்த எண்ணிக்கை, அளவு, வடிவம்மற்றும் செறிவு ஆகியவற்றையும் குறைத்து வீரியமற்றதாக்கி விடுகிறதுஎன்பது இந்த ஆராய்ச்சியின் சாராம்சம். வழக்கம் போல் செக்ஸில்
ஈடுபட்டாலும், உயிரணுவின் வீரியமின்மை காரணமாக பெண்ணை கருத்தரிக்க செய்ய முடியாமல் போகிறது.

விந்தணு உற்பத்திக்கு காய்கறி உதவும்

இது பற்றி வேக்ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தின் மென்ஸ் ஹெல்த்க்ளினிக்கின் இயக்குநர் டாக்டர் ரயான் டெர்லிக்கி கூறுகையில், ‘‘கடந்தபல ஆண்டுகளாக ஆண்களின் இனப்பெருக்க திறன் குறைந்துக் கொண்டேவருகிறது. தங்களது உணவுமுறையில் உள்ள ஒன்றுதான் இந்தவிளைவுக்கு காரணம் என்பதை பெரும்பாலான ஆண்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்’’ என்கிறார்.நாம் சாப்பிடும் உணவுகள் உற்பத்தியாகும் உயிரணுக்கள் எண்ணிக்கை,அவைகள் இயல்பான வடிவில் இருக்கிறதா, மற்றும் எவ்வளவு நன்றாகநகரும்தன்மையை கொண்டிருக்கிறது என்பதில் ஒரு முக்கிய
பங்காற்றுகின்றன.

ஆண்களின் இனப்பெருக்க திறன் மற்றும் மலட்டுத்தன்மை பற்றியமேலும் மூன்று ஆராய்ச்சிகளும், விந்துவில் இருக்கும் உயிரணுக்களைகணிசமாக குறையச் செய்யும் பட்டியலில் சீஸ் (பாலாடைக் கட்டி) மற்றும்பால் சார்ந்த பொருட்களை சேர்த்துள்ளன. இதே போல் பதப்படுத்தப்பட்டஇறைச்சி உணவுகளும் தங்கள் பங்கிற்கு கேடு விளைவிக்கின்றன.உயர் பூரித கொழுப்புள்ள (இறைச்சி மற்றும் பால் பொருட்களில்நிறைந்திருப்பவை) உணவுகளை சாப்பிடும் ஆண்களின் உயிரணு எண்ணிக்கையானது, அவைகளை குறைவாக சாப்பிடுவர்களுடன்
ஒப்பிடுகையில் 43% அளவுக்கு குறைவாக இருந்தது.

கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை குறைப்பது உடலின்பொதுவான ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமல்லாது, அவர்களின்இனப்பெருக்க திறனையும் மேம்படுத்தியது குறிப்பிடத்தக்கது.அதே சமயம் அதிகமாக காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையும், தரமும் நன்றாக இருப்பதும் இந்த
ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதே போல் தாவர புரதங்கள்சார்ந்த உணவுமுறையானது பெண்களுக்கு மலட்டுத்தன்மை அபாயத்தை குறைப்பதாக உடல் பருமன் மற்றும் மகளிர் நோயியல் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அடிக்கடி இறைச்சி உணவுகளை சாப்பிடுவதுகருத்தரிக்கும் வாய்ப்புகளை குறைக்கின்றன. அதிக அசைவ உணவுகளால்உடலில் உண்டாகும் உயர் கொலஸ்ட்ரால் அளவுகள் கருத்தரிப்பதைதடுக்கின்றன அல்லது தாமதப்படுத்துகின்றன என்று இந்த ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆகவே குழந்தைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புகளை அதிகரிக்ககாய்கறிகள், பழங்கள் போன்ற சைவ உணவுகளையே சாப்பிடவும். பால்சார்ந்த உணவுகள் மற்றும் இறைச்சியை ஒதுக்கி விடவும்.அப்புறம் ஆண்களே, கடைசியாக இன்னொரு முக்கியமான விஷயம்: மதுஅருந்துவது மற்றும் சிகரெட் புகைப்பதையும் விட்டு விடுங்கள்.இவைகளும் உங்களின் ‘வீரியத்துக்கு’ தாராளமாக வேட்டு வைக்கக்
கூடியவைதான் என்பதை மறந்துடாதீங்க!.

You'r reading காய்கறிகளும் பழங்களும் விந்தணு உற்பத்திக்கு உதவும்... ஆண்களே மறந்துடாதீங்க! Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை