அசாதாரணமான உடல் சோர்வு நீரிழிவு நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம் என அமெரிக்க நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிபுணர்கள் அறிவுரை செய்து வருகின்றனர்.
வேலை செய்யும்போது சோர்வு ஏற்படத்தானே செய்யும் என நினைத்து எல்லா நாளையும் கடக்க வேண்டும். சிலர், தூங்கி எழுந்ததிலிருந்து இன்றைய நாளே சோர்வாக இருக்கிறதே என ஒவ்வொரு நாளையும் புலம்பியே கடத்துவர். இன்னும் சிலருக்கு வரவர சோர்வு அதிகமாகிறதே என வயதை நொந்து கொண்டிருப்பர்.
இதில் எந்தப் பட்டியலில் நீங்கள் இருந்தாலும், சோர்வு வழக்கத்துக்கு மாறாக அசாதாரணமாக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரைக் காண வேண்டும். உடல்வலி, வேலை என சோர்வு இருந்தால் அதற்குத்தகுந்தபடி ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், இந்தச் சோர்வு சக்கரை நோயின் முதல் அறிகுறியாக இருந்தால்? சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி இருக்கிறோம் என்று உஷாரகிக்கொள்ளுங்கள். ஏனெனில் உடலில் உள்ள இன்சுலின் அளவும் ரத்ததில் உள்ள க்ளுக்கோஸ் அளவு ஏறி இறங்கி விளையாடிக்கொண்டிருந்தால் நமக்கு நிச்சயமாக உடல் சோர்வாகத்தான் காணப்படும்.
தகுந்த நேரத்தில் கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நமது உடல்நலனை மேம்படுத்த உதவும்.