தொள தொள சதை குறைந்து இடுப்பு சிக்கென்று மாற சாப்பிடவேண்டிய பழங்கள்

பருமனான தோற்றத்தை கொடுப்பதில் வயிறு, இடுப்பு இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வயிற்றிலும் இடுப்பிலும் அளவுக்கதிகமான சதை சேரும்போது அது தோற்றத்தை அசிங்கமாக மாற்றிவிடுகிறது. இந்த இரண்டிலும் உள்ள சதைகளை குறைத்தாலே உடம்பு ஓரளவு கச்சிதமான தோற்றத்தை பெற்றுவிடும். குளிர்காலத்தில் காலைவேளை மந்தமாக இருக்கும். எழுந்து உடற்பயிற்சி செய்வது பெரும்பாலும் நடக்காத விஷயமாகிவிடும். இதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட சில பழங்களை அதிகமாக சாப்பிடுவது உடல் எடையை குறைப்பதில் உதவும் என்று கூறப்படுகிறது. அதிக அளவு நார்ச்சத்து, அழற்சிக்கு எதிராக செயல்படும் தன்மை (anti-inflammatory properties), உடலுக்கு இன்றியமையாத வைட்டமின்கள் அடங்கிய இப்பழங்கள் பல்வேறு உடல் ஆரோக்கிய குறைபாடுகளை குணப்படுத்துவதோடு, வயிற்று சதை குறையவும் உதவுகின்றன.

கொய்யா
குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த பழம் கொய்யா. அது சுவைமிக்கது மட்டுமல்ல, பல்வேறு ஊட்டச்சத்துகள் அடங்கியதுமாகும். கொய்யா பழத்தில் அதிக அளவு புரதம் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும் நிறைய உள்ளது. செரிப்பதற்கு அதிக நேரம் எடுப்பதால், கொய்யா தின்றால் நெடுநேரம் பசி இருக்காது. ஆகவே, தேவையற்ற நொறுக்குத்தீனிகள் மற்றும் தின்பண்டங்களை சாப்பிட்டு உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. நம்மை ஆரோக்கியமாக காத்துக்கொள்கிறது. குளிர்காலத்தில் தட்டுப்பாடின்றி கிடைக்கக்கூடிய ஆரஞ்சு, குறைந்த அளவு எரிசக்தி (கலோரி) கொண்டது. இதில் கொழுப்பு அறவே கிடையாது. ஆகவே, ஆரஞ்சு சாப்பிட்டால் உடலுக்கு நன்மை மட்டுமே கிடைக்கும்.

அத்திப்பழம்
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இதை சாப்பிட்டால் நெடுநேரம் வயிறு திருப்தியாக இருக்கும். செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக காத்துக்கொள்ளும் பண்பு அத்திப்பழத்திற்கு உள்ளது. இது வயிற்றுப்பகுதியிலுள்ள கொழுப்பை கரைத்து, உடல் எடை குறைவதற்கு உதவுகிறது.

சப்போட்டா
உடல் எடையை குறைய வேண்டுமானால் முதலில் ஜீரண மண்டலம் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். சாப்பிடும் உணவு நன்கு செரித்தால் மட்டுமே உடல் எடையை குறைக்கமுடியும். நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் செரிமான மண்டலத்தை நன்கு செயல்பட வைக்கின்றன. சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் இது நம் ஜீரண உறுப்புகளை நன்கு செயல்பட வைக்கிறது. ஐபிஎஸ் (IBS) எனப்படும் வயிற்றுப்பிரச்னை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதின் மூலம் உடல் எடை குறைய உதவுகிறது.

திராட்சை
உடல் பருமன் பற்றிய ஆய்விதழ் (Journal of Obesity) கறுப்பு திராட்சையில் இருக்கும் ரெஸ்வெரட்டோல் (resveratrol) என்ற பொருள் நல்ல கொழுப்பு உற்பத்தியாக உதவுகிறது என்று தெரிவித்துள்ளது. உடல் பருமனாக காரணமான கொழுப்பு உற்பத்திக்கு இது பயன்படுவதில்லை. அமெரிக்காவிலுள்ள ஓரிகான் மாகாண பல்கலைக்கழகம் (Oregon State University) சிவப்பு திராட்சைகளில் உள்ள எலிஜியாக் அமிலம் கொழுப்பு செல்களை குறிவைத்து அவை வளருவதை தடுக்கின்றன என்று கண்டுபிடித்து அறிவித்துள்ளது.

குளிர்காலத்தில் தாராளமாகக் கிடைக்கக்கூடிய இந்தப் பழங்களை சாப்பிட்டு வயிறு மற்றும் இடுப்பிலுள்ள சதைகளை குறைத்து கட்டுகோப்பான உடல்வாகை பெறலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :