ஓவ்வொரு பிராந்தியமும் தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்தவகையில் மத்தியப்பிரதேச மாநிலமானது தங்களின் இளைஞர்படையை தற்சார்புடையவர்களாகவும், திறம்மிகு தொழல்முனைவோர்களாகவும் உருவாக்க "LAUNCH PAD" எனும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதல்வரான சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது அம்மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து சமூக வெளியில் வரும் ஆண் மற்றும் பெண் இளைஞர்களை தன்னம்பிக்கையோடும், சமூகவெளியில் சிறந்த தொழிலுமுனைவோராகவும் மாற்ற திட்டம் உத்வேகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திட்டம் அம்மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்தின் மூலம் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சகத்தின் மூலம் அவர்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் தற்சார்பு சார்ந்த கல்வி வழங்கப்படும்.
இந்த பயிற்சியானது அவர்களின் தொழில் வாய்ப்பை பெருக்க பயன்படும். மேலும் இந்த பயிற்சி முடித்தவர்களுக்கு, அமைச்சகத்தின் மூலம் ரூ. ஆறு இலட்சம் அவர்கள் தொழில் ஆரம்பிக்க முதலீடாக வழங்கப்படும். இந்த திட்டத்தை சரியான முறையில் அமல்படுத்த, இம்மாநிலத்தின் 52 மாவட்டங்களை 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தலைமையகம் அமைக்கப்படவுள்ளது. அந்த தலைமையகமானது இந்தூர், சாகர், குவாலியர், ஜபல்பூர் மற்றும் போபால் ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் ஒரு அரசு சாரா நிறுவனமாகும்.