உடலுக்கு ஆரோக்கியம் தரும் துளசி டீ செய்வது எப்படி??

by Logeswari, Feb 15, 2021, 21:03 PM IST

இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நோய்களில் இருந்து முழு நிவாரணம் பெற துளசி டீயை பருகுங்கள். தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. செயற்கை மருந்தை விட இயற்கை மருந்து மூலமாக கூடிய விரைவில் பயன் பெறலாம். மற்றும் இதிலிருந்து எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. துளசி குடிப்பதன் மூலம் வயிற்றில் உள்ள அழுக்கு யாவும் அழிந்து சுத்தமாகும். சரி வாங்க துளசி டீ செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:- காய்ந்த துளசி - 2 ஸ்பூன் வெந்நீர் - தேவையான அளவு புதினா - சிறிதளவு எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

செய்முறை:-

முதலில் செடியில் இருந்து துளசியை பறித்து நன்கு வெயிலில் காய வைத்து கொள்ளவும். இலை நன்றாக சுருங்கும் வரும் வரை வெயிலில் வைக்கவும். அடுப்பில் தேவையான அளவு நீர் வைத்து ஒரு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

கொதிக்கும் வேளையில் காய்ந்த துளசி, புதினா ஆகியவை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்னர் நீரை மட்டும் வடிகட்டி கொள்ளவும். கடைசியில் எலுமிச்சை சாறை சேர்த்தால் துளசி டீ தயார்..

You'r reading உடலுக்கு ஆரோக்கியம் தரும் துளசி டீ செய்வது எப்படி?? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை