வெல்லத்தின் ஆரோக்கியம் பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத உண்மைகள் இதோ.. கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்..

by Logeswari, Feb 17, 2021, 19:15 PM IST

எல்லோரின் வாழ்க்கையிலும் உணவு இன்றியமையாதது.உணவை சாப்பிட்டால் மட்டுமே உயிர் வாழ முடியும். நீண்ட நாள் உயிர் வாழ வேண்டும் என்றால் அதுக்கு தேவையான ஆரோக்கிய உணவை சாப்பிட வேண்டும். சர்க்கரையை உணவில் சேர்ப்பதால் தேவையில்லாத நோய்கள் உண்டாகும். சர்க்கரையை வெல்லத்துடன் ஒப்பிடும்பொழுது வெல்லத்தில் அதிக வகையான சத்துகள் உள்ளன.. இதனை அறிந்து சிலர் சர்க்கரையை முழுவதுமாக உணவில் இருந்து நீக்கிவருகின்றனர். இந்நிலையில் வெல்லத்தில் என்ன நன்மைகள் உள்ளது என்பதை பின்வருமாறு காணலாம்.



வெல்லம் சாப்பிடுவதால் உணவு செரிமானத்தை மேம்படுத்துகிறது. அதிக வகையான உணவுகள் முக்கியமான அசைவ உணவுகளை உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டால் சீக்கிரமே செரிமானம் அடைந்து விடும். சிலருக்கு மலம் கழிக்க கடினமாக இருக்கும். ஆனால் வெல்லம் அதனை சரி செய்ய உதவுகிறது.இதனால் தினமும் வெல்லம் சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை.
வெல்லத்தில் அதிக வகையான சத்துக்கள் உள்ளது.

இதில் முக்கியமான ஜிங்க் சக்தி இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. வெல்லத்தை பயன்படுத்தினால் சர்க்கரை நோய்க்கு முற்று புள்ளி வைத்து விடலாம். சர்க்கரை நோய்க்கு சிறந்த மாற்று மருந்து என கூறலாம். வெல்லத்தில் பனை வெல்லம், தென்னை வெல்லம், பாகு வெல்லம் என மூன்று வகைகள் உள்ளது. இந்த மூன்று வெல்லத்திலும் இயற்கையான ஊட்ட சத்துக்கள் நிரம்பி உள்ளது. ஆதலால் இந்த மூன்று வெல்லத்தையும் உணவில் சேர்ப்பது நல்லது. இதனை உண்டு உடலை தாக்க வருகின்ற நோயுடன் எதிர்த்து போராட தயாராகுங்கள்..

You'r reading வெல்லத்தின் ஆரோக்கியம் பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத உண்மைகள் இதோ.. கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.. Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை