பழங்கள் ஊட்டச்சத்துகளைக் கொண்டவை என்பதில் ஐயமில்லை. உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்களுக்குப் பழங்கள் முக்கியமான உணவாகும். ஆனால், பழங்களை எப்போது சாப்பிடலாம் என்ற தெளிவான நோக்கு பலருக்கு இல்லை.சிலர் காலை உணவுடன் பழங்களைச் சாப்பிடுகின்றனர். பலர் சாப்பிட்டு முடித்தவுடன் பழங்களைச் சாப்பிடுகின்றனர். உண்மையில் பழங்களைச் சாப்பிட ஏற்ற நேரம் எது தெரியுமா? பழங்கள் பலவித ஊட்டச்சத்துகளைக் கொண்டவை. வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களை (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்) பழங்கள் கொண்டிருக்கின்றன.
ஆனால் நாம் சாப்பிடும் உணவில் பெரும்பாலும் புரதம், கார்போஹைடிரேடுகள், கொழுப்பு ஆகியவை உள்ளன. உணவோடு இவற்றைச் சாப்பிடும்போது பழங்களிலுள்ள சத்துகள் சரியாக உடலில் சேர்வதில்லை. அவை புரதம் மற்றும் கொழுப்போடு செரிக்கப்பட்டு பலனில்லாமல் போகின்றன. ஆகவே, சாப்பாட்டுடன் பழங்களைச் சாப்பிட்டால் உணவின் கலோரி அதிகரிப்பதைத் தவிர வேறு விளைவுகள் ஏற்படுவதில்லை.பழங்களைக் காலை, மதியம் அல்லது இரவு என்று எந்த உணவுடனும் அல்லாமல், தனியே ஒரு நேரத்தில் சாப்பிடவேண்டும். மதிய உணவுக்கு முந்தைய வேளையில் பழங்களைச் சாப்பிடுவது நல்ல பலனை அளிக்கும்.