மார்பகங்களை பெரிதாக்க இயற்கையான வழிகள்

Advertisement

பெண்மையின் அடையாளமாக மார்பகங்கள் விளங்குகின்றன. மார்பகங்கள் பெரிதாக இருக்கவேண்டும் என்று பல பெண்கள் விரும்புகின்றனர். அதற்கு அழகிய தோற்றம், சுய பெருமிதம் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்கள் உள்ளன. அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக, மார்பகங்களைப் பெரிதாக்கப் பல செயற்கை வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை செலவு மிக்கவை என்பதுடன், அவற்றை அனைவரும் விரும்புவதில்லை என்பதும் உண்மையாகும்.

ஒரு பெண்ணின் மார்பகத்தின் அளவு வாழ்நாளில் 6 முறை மாறுவதாகக் கூறப்படுகிறது. கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் இவற்றின்போதே மார்பகம் முழுமையான முதிர்ச்சியை அடைகிறது. மரபு, வாழ்வியல் முறை மற்றும் உடல் எடை ஆகியவற்றைப் பொறுத்து மார்பகங்களின் அளவில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. சரியான உடற்பயிற்சி, கண்டிப்பான வாழ்க்கை முறை, சரியான உணவு, மசாஜிங், பெரிதாக்கும் முறைகள் ஆகியவற்றைக் கைக்கொண்டால் மார்பகங்களைப் பக்கவிளைவில்லாமல் இயற்கையான முறையில் பெரிதாக்கலாம்.

உணவு உடலின் வடிவத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டரான் என்ற இரு ஹார்மோன்களை பொறுத்தே பெரும்பாலும் மார்பகங்களின் அளவு அமைகிறது. புரோமின் மற்றும் மாங்கனீசு ஆகிய ஊட்டச்சத்துகள், இளம்பருவத்தில் இருக்கும் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே உணவிலிருந்து ஹார்மோன்களை உறிஞ்சிக்கொள்ள உதவுகின்றன. ஆகவே, பைட்டோஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டரான், மாங்கனீசு ஆகியவை சமச்சீராக இருக்கும் உணவுகளைச் சாப்பிடவேண்டும்.

பால்

எல்லா வயதினருக்கும் பல்வேறு காரணங்களுக்காகப் பால் அருந்தும்படி கூறப்படுகிறது. மார்பகங்கள் பெரிதாகவேண்டும் என்று விரும்பும் பெண்களுக்கு மிகவும் ஏற்ற உணவுப்பொருள் பால் ஆகும். பாலில் மனித உடலில் இருக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டரான், புரோலாக்டின் ஆகிய ஹார்மோன்கள் உள்ளன. இவை அனைத்துமே மார்பக அளவை பெரிதாக்க உதவுவதுடன், கருத்தரித்தலுக்கும் நன்மை செய்கிறது. மார்பகங்களுக்கு இரத்த ஓட்டத்தை இவை தூண்டுகின்றன.பாலாடைக்கட்டி (சீஸ்), யோகர்ட், பனீர் ஆகியவற்றையும் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பால் அருந்தாதவர்கள் சோயா மில்க் அருந்தலாம்.

நட்ஸ்

இருதயத்தையும் மூளையையும் ஆரோக்கியமாக காக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகளில் (ஸீட்ஸ்) ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம் உள்ளது. இது மார்பகங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
வால்நட், முந்திரி (கேஷுநட்), வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, பூசணி விதை மற்றும் ஆளிவிதை (ஃபிளக்ஸ்ஸீட்) ஆகியவை உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை சீராக்குகிறது.
இறால்

பருவ வயது பெண்களுக்குக் கடல் உணவுகள் அதிகம் ஏற்றவை. இறால் மற்றும் மீன்கள் இவற்றில் ஒமேகா-3, மாங்கனீசு ஆகியவை அதிகம் உள்ளன. இவை மார்பகங்களைப் பெரிதாக்குவதுடன், கருத்தரித்தலுக்கும் உதவுகிறது.

சிக்கன்

பருவ வயது செயல்பாடுகளுக்குக் கோழியிறைச்சி அதிகம் ஏற்றது. சிக்கனில் உள்ள ஊட்டச்சத்துகள் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கின்றன. ஆகவே, சிக்கன் அதிகமாகச் சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும்.

வெந்தயம்

உடல் எடை குறைப்புக்குப் பரிந்துரைக்கப்படும் உணவு வெந்தயமாகும். பாலூட்டும் தாய்மார்களுக்கு வெந்தயம் நல்ல உணவாகும். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும். வெந்தயத்தில் பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் அதிகம் உள்ளன. இவை இரத்த ஓட்டத்தைத் தூண்டுகின்றன.

ஆரோக்கியமான எண்ணெய்கள்

அவகாடோ அல்லது ஆலிவ் (ஒலிவ எண்ணெய்) ஆயில் ஆகியவை சில வாரங்களிலேயே மார்பக வளர்ச்சியைக் கொடுக்கும். இவற்றில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. இவை பாலூட்டும் சுரப்பிகளை வளர்க்கின்றன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதோடு, மசாஜ் செய்யவும் பயன்படுத்தலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>