இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க சில ஆலோசனைகள்

நாம் எப்போதெல்லாம் மருத்துவரிடம் செல்கிறோமோ அப்போதெல்லாம் அவர் தவறாமல் நம் இரத்த அழுத்தத்தைச் சோதிப்பதைக் காணலாம். ஃபேமிலி ஹிஸ்டரி என்று சொல்லப்படும் பரம்பரை பாதிப்பாக இரத்தக்கொதிப்பு இல்லாதபட்சத்தில் பெரும்பாலும் அதை நாம் கவனிப்பதில்லை. உடல் நலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும் இரத்த அழுத்தத்தை நாம் கவனிக்கிறோம்.

இரத்த அழுத்தம் என்பது என்ன?

நம்முடைய தமனிகளின் வாயிலாக இரத்தம் பாயும்போது தமனிகள் என்னும் நல்ல இரத்தத்தைக் கொண்டு செல்லும் நாளங்களின் சுவர்களில் இரத்தத்தால் உருவாகும் அழுத்தத்தையே இரத்த அழுத்தம் என்று கணக்கிடுகிறோம். இரத்த அழுத்தத்தை அளவிடும்போது இரண்டு அளவுகள் இருப்பதைக் காணலாம். இருதயம் துடிக்கும்போது கணக்கிடப்படும் அளவு சிஸ்டோலிக் அழுத்தம் என்றும், இருதயம் ஒருமுறை துடித்து பின்னர் இன்னொரு முறை துடிப்பதற்கு இடையில் அளவிடும் அளவு டயஸ்டோலிக் அழுத்தம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த இரண்டு அளவுகளையும் ஒரு சரிவுகோட்டால் பிரித்து எழுதுவர்.இரத்த அழுத்தம் 120/80 என்ற அளவில் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் அது இயல்பான இரத்த அழுத்தம் எனவும், 140/90 என்ற அளவில் இருந்தால் உயர் இரத்த அழுத்தம் எனவும், 180/120 என்ற அளவில் இருந்தால் தீவிர உயர் இரத்த அழுத்தம் என்றும் அறிந்துகொள்ளலாம்.

உயர் இரத்த அழுத்தத்தின் பாதிப்புகள்
உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு இருப்போருக்கு உடலின் முக்கிய உறுப்புகளுக்கு இரத்தம் போய்ச் சேருவதற்கு இருதயம் கடினமாக உழைக்கவேண்டியிருக்கும். இரத்த ஓட்டத்திற்குத் தடை அதிகமாக இருப்பதால், இருதயம் அதிகமாக உழைக்கும். காலப்போக்கில் இது உடல்நலத்தில் பாதிப்பினை ஏற்படும். பக்கவாதம், மாரடைப்பு, மரணம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர பாதிப்புகளை உயர் இரத்த அழுத்தம் உருவாக்கும்.

இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் உணவுப்பொருள்கள்

உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 1500 மில்லி கிராமுக்கும் குறைவான அளவு சோடியம் நம் உடலில் சேர வேண்டும். ஆரோக்கியமானவர்களுக்குச் சாப்பிடும் உப்பானது பிரிக்கப்பட்டு, தேவைக்கு அதிகமான உப்பும், நீரும் சிறுநீரகம் வழியாக வெளியேற்றப்படும். உப்பு மற்றும் பொட்டாசியம் சமநிலை இல்லாமல் தவிப்போர், உப்பின் அளவை குறைத்துச் சாப்பிடுவது அவசியம். சிறுநீரக பாதிப்பு மற்றும் இருதயம் இரத்தத்தை வெளியேற்றும் முறையில் பாதிப்பு இருப்போர் உப்பைக் குறைப்பது கட்டாயமாகும்.உப்பு மற்றும் பொட்டாசியம் இவை உடலில் சமநிலையில் பேணப்பட்டால், இரத்த அழுத்தமும் சீராக இருக்கும். பிரெக்கோலி, பசலைக்கீரை, தக்காளி, காரட், உருளைக்கிழங்கு, பயிறுகள், சோயாபீன்ஸ், வாழைப்பழம், ஆரஞ்சு, பப்ளிமாஸ், உலர்ந்த திராட்சை ஆகிய உணவுப்பொருள்கள், உப்பு - பொட்டாசியம் அளவை உடலில் சீராக இருப்பதற்கு உதவும்.

இரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்க உதவும் செயல்கள்

மது அருந்தினால், உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆல்கஹாலில் எரிசக்தி (கலோரி) அதிகம். ஆகவே, அது இரத்த அழுத்தத்தைப் பாதிக்கும். உடல் நிறை குறியீடாகிய பிஎம்ஐ அதிகமாக இருந்தாலும் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும். உடல் எடையில் அரை மற்றும் ஒரு கிலோ குறைந்தால் இரத்த அழுத்தத்தின் அளவு 1 mmHg அலகு குறையும் எனக் கூறப்படுகிறது. மன அழுத்தம் அதிகரிக்காமல் எச்சரிக்கையாக இருப்பது இரத்த அழுத்தம் உயராமல் இருப்பதற்கான வழியாகும். ஆரோக்கியமான உணவுப் பொருள்களைச் சாப்பிடுதல், உடலைத் தளர்த்துவதற்கு எளிய உடற்பயிற்சிகள் செய்தல், மனஅழுத்தத்தை போக்கும் தியானம் போன்ற வழிமுறைகளை கடைப்பிடித்தல் ஆகியவை உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :