வயிற்றுச் சதையை குறைக்கவேண்டுமா? இவற்றை தவிருங்கள்

by SAM ASIR, Feb 26, 2021, 18:47 PM IST

அநேகருக்கு இருக்கும் கவலைகளில் மிகவும் பெரியது, 'வயிறு தொப்பையா இருக்குதுங்க' என்பதுதான். ஆண்கள் மட்டும் என்றில்லை; அநேக பெண்களுக்கும் தங்கள் வயிற்றைக் குறைக்கவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. வயிற்றில் ஏற்கனவே சேர்ந்துவிட்ட சதையை குறைக்க உடற்பயிற்சி செய்யவேண்டும் என்பது ஒருபுறமிருக்க, சதை இருப்பவர்களும், இனி தொப்பை விழுந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்களும் தவிர்க்கவேண்டிய சில உணவுபொருள்கள் உள்ளன.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

வயிற்றுக்கு ஒத்துவராத தின்பண்டம் உருளைக்கிழங்கு சிப்ஸ் என்ற ஹார்வேர்டு பல்கலைக்கழக ஆய்வுகள் கூறுகிறது. அவற்றில் பூரித கொழுப்பு (சாச்சுரேட்டட் ஃபேட்) இருப்பதால் அடிவயிற்றில் சதை விழுவதற்கு காரணமாகிறது. ஆகவே, உருளைக்கிழங்கு சிப்ஸுக்கு நோ சொல்லுங்க.

பிஸா

பிஸாவின் மேலே காய்கறிகளை பார்க்கிறோம். "காய்கறிகள் இருந்தால் உடலுக்கு ஆரோக்கியம்தானே?" என்றும் எண்ணுகிறோம். ஆனால், உருளைக்கிழங்கு சிப்ஸை போலவே பிஸாக்களிலும் பூரிதமான கொழுப்பு (சாச்சுரேட்டட் ஃபேட்) உள்ளது. அதனால் வயிற்றில் சதை விழும்.

ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ்

ஃபிரெஞ்ச் ஃப்ரைஸை தொடர்ந்து தின்று வருபவர்களுக்கு ஒவ்வொரு நான்கு ஆண்டு காலத்திலும் வழக்கத்தை விட 1.5 கிலோ எடை அதிகரிக்கும் என்றும் ஹார்வேர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பேக்கரி பண்டங்கள்

லோ ஃபேட் பேஸ்ட்ரீஸ் என்று பேக்கரி உணவுகள் சில கூறப்படுகின்றன. குறைந்த அளவு கொழுப்பு கொண்டவை என்பதால் ஆரோக்கியமானவைபோல் இவை கூறப்பட்டாலும் இவற்றில் பதப்படுத்தப்பட்ட மாவு உள்ளது. இவற்றில் அதிக அளவு சர்க்கரை சேர்ந்திருக்கும். சோடியமும் அதிகமாக உள்ளது. இவை அனைத்துமே வயிற்றுப் பகுதியில் சதையை அதிகப்படுத்தக்கூடியவை ஆகும்.

ஐஸ்கிரீம்

வெயில் காலம் வந்தால் ஐஸ்கிரீமை அதிகமாக சாப்பிடுகிறோம். ஐஸ்கிரீம் அதிக அளவு கார்போஹைடிரேடு நிறைந்ததாகும். இவற்றை தொடர்ந்து தின்றால் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படியும். வயிறு தொப்பையாகும்.

சாக்லேட்

எல்லா சாக்லேட்டுகளும் தீமை செய்பவை அல்ல. டார்க் சாக்லேட்டுகள் உடல் நலத்திற்கு ஏற்றவை. ஆனால் மில்க் சாக்லேட் எனப்படும் வை அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டது. ஆகவே, அவற்றில் கலோரி நிறைய இருக்கும். பால் நிறைந்த சாக்லேட் (மில்க் சாக்லேட்) உடல் எடையை நிச்சயமாய் அதிகரிக்கும்.

பழச்சாறு

இயற்கையான பழரசமாக இருந்தாலும் அவற்றை வெளியே கடைகளில் குடித்தால் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட பழச்சாறுகளில் இருப்பது ஃப்ரக்டோஸ் என்னும் சர்க்கரை வகையாகும். இது அடிவயிற்றில் இருக்கும் அடிப்போஸ் திசுக்களில் கொழுப்பினை படியச் செய்யும். ஆகவே, வெளியே சந்தைகளில் கிடைக்கும் பழச்சாறுகளை அருந்தக்கூடாது.

ஒயிட் பிரெட்

வயிற்று சதை குறையவேண்டும் என்று முயற்சிப்பவர்கள் ஒயிட் பிரெட் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். ஒயிட் பிரெட் சாப்பிடுபவர்களுக்கு அடிவயிற்றில் விஸ்செரல் என்னும் கொழுப்பு படியும். அப்படி படிந்துவிட்டால் பின்னர் சதையை குறைப்பது கடினம். ஆகவே, ஒயிட் பிரெட் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

டயட் சோடா

உலகின் பல பாகங்களிலும் டயட் சோடா (diet soda) என்ற பானம் பிரபலமாக உள்ளது. இது சாதாரண சோடாவுக்கு மாற்றான ஆரோக்கியமான பானம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதில் செயற்கை அல்லது இயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. அஸ்பார்டேம் மற்றும் சச்சார்சின் எனப்படும் சுவையூட்டிகள் மற்றும் காஃபைன் டயட் சோடாவில் கலந்திருப்பதால் இவை நீரிழிவு, ஈரலில் கொழுப்பு சேர்தல், நினைவு குழப்பம், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்களுக்கு காரணமாகின்றன. டயட் சோடா, அடிவயிற்றில் சதை சேரவும் இது காரணமாகிறது.

You'r reading வயிற்றுச் சதையை குறைக்கவேண்டுமா? இவற்றை தவிருங்கள் Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை