புதுச்சேரியில் தேர்தல் பணிக்குத் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசுக்குக் கோரிக்கை அனுப்ப இருப்பதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது:நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழ் தெரிந்த அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்க, மத்திய அரசுக்கு நான் கோரிக்கை வைக்க இருக்கிறேன்.
புதுச்சேரியில் நியாய விலையில் பொருட்கள் மக்களுக்குக் கிடைக்க, நியாய விலை கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. , அங்கன்வாடி குழந்தைகளுக்கு மூன்று முட்டைகள் வழங்கப்படுவது போல இனி கர்ப்பிணிப் பெண்களுக்கும் முட்டை வழங்கப்படும். அவர்களுக்குச் சத்துணவு வழங்கவும் திட்டம் தயாரித்து வருகின்றோம்.
தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் 9,10,11 ஆகிய வகுப்புகளைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது குறித்து கல்வித் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மதிய உணவு மற்றும் காலை உணவுத்திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தமிழிசை தெரிவித்துள்ளார்.