புதுச்சேரியில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள் எனப் புதுச்சேரி மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பிர்சிங்க் தெரிவித்தார்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பிர்சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாகக் காரணமாக 952 இருந்த வாக்குச்சாவடிகள் 1,559 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் 10 லட்சத்து 2 ஆயிரத்து 414 வாக்காளர்கள் உள்ளனர். 233 பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளாகவும், 16 மிகவும் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றார்.
புதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்
Advertisement