தலைவலியில் இத்தனை வகைகளா? தவிர்ப்பது எப்படி?

Advertisement

தலைவலி வந்தால் நாள் முழுவதும் எந்த வேலையும் செய்ய இயலாமல் வீணாகிப்போகும். தலைவலி வந்தால் கிடைத்த மாத்திரைகளைச் சாப்பிடுவதும் பலருக்குப் பழக்கமாகியுள்ளது. தலைவலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தலைவலிகளைத் தூண்டக்கூடிய காரணிகள் பல உள்ளன. சிலருக்குப் பசித்ததும் சாப்பிடாவிட்டால் தலைவலியும் வந்துவிடும்; வேறு சிலருக்குச் சத்தத்தைக் கேட்டால் தலைவலிக்கும். வெவ்வேறு வகையான தலைவலிகளை இனம் காண்பது முக்கியம். ஒவ்வொரு தலைவலிக்கும் வேறு வேறு சிகிச்சைகள் அவசியம்.

டென்ஷன் தலைவலி

பொதுவாக அனைவருக்கும் வரும் தலைவலி பதற்றத்தினால் ஏற்படுவதாகும். நெற்றியிலுள்ள தசைகள் சுருங்குவதால் இந்தத் தலைவலி உண்டாகிறது. தலையின் இருபுறமும் இந்த வலி இருக்கும். இவை தாங்கிக்கொள்ளக்கூடிய அளவில் இருக்கும். அதிக சத்தம், புகை, நெடி, லேப்டாப், கணினி மற்றும் மொபைல் போனிலிருந்து வரும் நீல நிற ஒளி ஆகியவற்றால் டென்ஷன் தலைவலி வரக்கூடும். உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லையென்றாலும் தலைவலிக்கும். தினமும் போதுமான அளவு நீர் அருந்துவதாலும், கடின வேலையின் இடையே அவ்வப்போது சிறிது ஓய்வு எடுத்துக்கொள்வதாலும் டென்ஷன் தலைவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

மைக்ரேன் தலைவலி
மைக்ரேன் தலைவலி, ஒரு பக்கத்தில் ஏற்படும். பெரும்பாலும் இதற்குப் பரம்பரையே காரணமாக அமையக்கூடும். மூளையில் தகவலை அனுப்பும் நியூரோடிரான்மிட்டர்களின் ஒழுங்கு குலைதல், அழற்சி மற்றும் மூளையில் ஏற்படும் மின்னணு செயல்பாட்டில் கிளர்ச்சி ஆகியவற்றால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. அதிக வெளிச்சம், சத்தம் மற்றும் நெடி ஆகியவை மைக்ரேனை தூண்டக்கூடிய காரணிகளாகும். சில வாழ்வியல் பாதிப்புகள், நாமாக மருந்துகளைச் சாப்பிடுவது ஆகியவற்றாலும் மைக்ரேன் உருவாகிறது. மைக்ரேன் தலைவலியைத் தூண்டும் மது, குறிப்பிட்ட உணவு, மன அழுத்தம் போன்றவற்றை அடையாளம் கண்டு அவற்றைத் தவிர்த்தால் ஒற்றைத் தலைவலிக்குத் தப்பிக்கலாம்.

காஃபைன் தலைவலி

காபி அதிகம் குடிப்பதால் வரும் தலைவலிக்கு காஃபைன் தலைவலி என்று பெயர். காபியிலுள்ள காஃபைன் மூளையின் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் பாதிப்பினால் இத்தலைவலி ஏற்படுகிறது. ஒரே நாளில் அதிக காபி அருந்துவதாலும், காபி குடிப்பதை நிறுத்திவிடுவதாலும் இது வரக்கூடும். சிலருக்குக் காபியால் மைக்ரேன் தலைவலியும் வரும். ஒருநாளைக்கு 250 மில்லி லிட்டர் அளவில் இருவேளைக் காபி அருந்தலாம். அதற்கு மேல் அருந்துவது இதுபோன்ற தலைவலிக்குக் காரணமாகிவிடக்கூடும்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>