கிட்னி ஸ்டோன் உருவாகாமல் எப்படி தடுக்கலாம்?

by SAM ASIR, Mar 3, 2021, 21:19 PM IST

சிறுநீரகக் கற்கள், பொதுவாக காணப்படும் வாழ்வியல் முறை நோயாகும். ஒருமுறை சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பிரச்னை மீண்டும் வரும் வாய்ப்பு உண்டு. கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) ஆக்ஸலேட் உடன் சேர்ந்து, சிறுநீரில் அடர்த்தியாகி காலப்போக்கில் படிகங்களாக மாறுகிறது. பின்னர் இந்தப் படிகங்களின் அளவு பெரிதாகிறது. சுண்ணாம்பு படிகங்களின் அளவு அதிகமாகும்போது அவை சிறுநீர் வெளியேறுவதை தடுக்கின்றன. அதன் காரணமாக வலி ஏற்படுகிறது.

பொதுவான காரணங்கள்
சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல் வாழ்வியல் முறை நோய் என்றாலும் கூட, அவை உருவாவதற்கு வேறு காரணங்களும் இருக்கக்கூடும். சிலருடைய சிறுநீரில் சிஸ்டைன், ஆக்ஸலேட், யூரிக் அமிலம், கால்சியம் அதிகமாக இருத்தல் அல்லது பரிந்துரைக்கப்பட்ட கால்சியம் சேர்ந்த சில மருந்துகளும் இவை உருவாகிறது காரணமாக அமையக்கூடும். பாலிசிஸ்டிக் எனப்படும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட சிறுநீரக பாதிப்புகளும் இந்தக் கற்கள் தோன்றுவதற்கு காரணமாகக்கூடும்.

அதிகமான பானங்கள்
திரவங்கள் நம் உடலில் அதிகமாக உள்ள தாது உப்புகளை வெளியேற்றும். போதுமான அளவு நீர் அருந்தாவிட்டால் தாது உப்புகள் சிறுநீரகத்தில் தங்கி, கற்கள் உருவாகக்கூடும். ஒருநாளைக்கு குறைந்தது 2 லிட்டர் அளவு தண்ணீர் போன்ற திரவ பானங்களை அருந்தவேண்டும்.

சோடியம்
அதிகமான உப்பினை உணவில் சேர்த்துக்கொள்வதும் சிறுநீரகக் கல் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும். உப்பு சேரும்போது சிறுநீரில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும்; சிறுநீரில் சோடியம் அதிகமாகும்போது, சிறுநீரில் இருக்கும் சுண்ணாம்புச் சத்து மறுபடியும் இரத்தத்திற்குள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இதன் காரணமாக சிறுநீரில் சுண்ணாம்பு சத்தின் அளவு அதிகமாகி, சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் இவற்றை குறைப்பதுடன் அதிக அளவில் காய்கறிகளை உண்ணுவதும் பயனளிக்கும்.

இறைச்சி
இறைச்சியில் அமிலத்தன்மை அதிகம் உண்டு. ஆகவே, யூரிக் அமில அளவு உடலில் கூடுகிறது. அதிக அளவு யூரிக் அமிலம் கால்சியம் ஆக்ஸலேட் உடன் இணைந்து சிறுநீரகக் கற்களை உருவாக்குகிறது. ஆகவே, இறைச்சி மற்றும் பால் பொருள்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

கீரை
பசலைக்கீரை போன்ற கீரைகளை சாப்பிடுவது சிறுநீரகக் கல் தோன்றும் வாய்ப்பை குறைக்கும். நாம் சாப்பிடும் உணவில் போதுமான அளவு சுண்ணாம்புச் சத்து மற்றும் ஆக்ஸலேட் இருந்தால், அவை சிறுகுடலில் ஒன்றாய் கலந்து சிறுநீரகக் கல் தோன்றும் வாய்ப்பை குறைக்கும்.

காபி
காபி மற்றும் கார்பன்டைஆக்ஸைடு கலந்த சுவையூட்டப்பட்ட பானங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை (மெட்டாபாலிசம்) அதிகரிக்கின்றன. இதன் காரணமாக உடலிலிருந்து நீர்ச்சத்து குறைகிறது. நீர்ச்சத்து குறைவதால் சிறுநீரகங்களில் கல் தோன்றுகிறது. சுவையூட்டப்பட்ட பானங்களும் இதையே செய்கின்றன.

புரோட்டீன்
சமச்சீர் உணவுகளை நாம் சாப்பிட்டால் சிறுநீரகக் கல் தொல்லை ஏற்படாமல் தப்பிக்கலாம். புரதம் போதுமான அளவு இருந்தால் சிறுநீரகக் கல் உருவாகாது. ஆனால், விலங்கு இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்து, புரதம் அதிகம் இருக்கும் காய்கறிகளை சாப்பிடுவதே ஏற்றது.

You'r reading கிட்னி ஸ்டோன் உருவாகாமல் எப்படி தடுக்கலாம்? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை