கோவிட்-19 தடுப்பூசி சர்டிபிகேட்டை டவுண்லோடு செய்வது எப்படி?

by SAM ASIR, Mar 15, 2021, 22:35 PM IST

கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மூத்த குடிமக்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படுகிறது. இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடுவதோடு அதற்கான சான்றிதழை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வதும் முக்கியம். சர்வதேச பயணம் போன்ற முக்கியமான செயல்பாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் அவசியம்.

கோவிட்-19 சான்றிதழை CoWin இணையதளம் மற்றும் செயலி, ஆரோக்கிய சேது (Aarogya Setu)செயலி ஆகியவற்றின் மூலம் டவுண்லோடு செய்யலாம்.

உங்கள் ஸ்மார்ட்போனில் ஆரோக்கிய சேது செயலியின் தற்போதைய வடிவம். தடுப்பூசி போடப்பட்ட பயனர் எண் (Beneficiary Reference ID), மொபைல் எண் ஆகியவை இருந்தால் சான்றிதழை தரவிறக்கம் செய்யலாம். தடுப்பூசி போடும்போது தொடர்பு எண்ணாக நீங்கள் கொடுத்த அலைபேசி எண்ணும், ஆரோக்கிய சேது செயலியை தரவிறக்கம் செய்ய பயன்படுத்திய அலைபேசி எண்ணும் ஒன்றாக இருக்கவேண்டும்.

வழிமுறை:

ஆரோக்கிய சேது செயலி மூலம்

ஆரோக்கிய சேது செயலியை திறந்துகொள்ளுங்கள்.
அதில் Cowin பட்டியை அழுத்தவும்.
தடுப்பூசி சான்றிதழ் (Vaccination Certificate) என்ற தெரிவை அழுத்தவும்.
உங்கள் பயனர் அடையாள எண்ணை உள்ளிட்டு, பின்னர் சான்றிதழை பெறுக (Get Certificate) என்ற பொத்தானை அழுத்தவும். (பயனர் அடையாள எண் - Beneficiary Reference ID தடுப்பூசி போடும்போது தரப்படும்).
ஆரோக்கிய சேது செயலியில் தரவிறக்கம் செய்யப்படும் சான்றிதழ் உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவாகும்.

Cowin இணையதளம் மூலம்

இணையத்தில் https://selfregistration.cowin.gov.in/vaccination-certificate என்ற இணைப்பில் செல்லவும்.
பயனர் அடையாள எண்ணை உள்ளிட்டு சான்றிதழை தரவிறக்கம் செய்யலாம்.

Cowin செயலி


Cowin செயலி மூலம் தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்ய இயலாது. ஆனால், கொரோனா தடுப்பூசி சான்றிதழை அதன் மூலம் தரவிறக்கம் செய்ய முடியும். Cowin செயலியை திறந்து, பயனர் அடையாள எண்ணை உள்ளிட்டு தேடுதல் (search) பொத்தானை அழுத்தவும்.

You'r reading கோவிட்-19 தடுப்பூசி சர்டிபிகேட்டை டவுண்லோடு செய்வது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை