சீரகத் தண்ணீரை எப்படி குடித்தால் உடல் எடை குறையும்?

Advertisement

'சீரகம்' அனைவர் வீட்டுச் சமையலறையிலும் இருக்கக்கூடியது. பல்வேறு உணவுகளில் நாம் அதைப் பயன்படுத்துகிறோம். சமையலை தவிர, உடல் எடையை குறைப்பதிலும் சீரகம் உதவுகிறது. செரிமானத்திற்கு உதவுதல், உடலிலுள்ள நச்சுகளை அழித்தல், சரும ஆரோக்கியத்துக்கு உதவுதல் ஆகிய இயல்புகளும் சீரகத்திற்கு உண்டு. ஆகவே, உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு சீரகம் ஏற்றதாகும்.

சீரகம் - சில உண்மைகள்

உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பினை கரைக்கக்கூடிய பொருளாக நெடுங்காலம் சீரகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செரிமானத்தை சீராக்கி, உடலிலுள்ள நச்சுப்பொருள்களை அகற்றுவது, தேவையற்ற கொழுப்பினை கரைப்பதற்கும், உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கும் அதிக உதவியாக அமையும். தொடர்ந்து சீரகத்தை ஏதாவது ஒருவிதத்தில் சேர்த்து வருவது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும். குறிப்பாக, சீரகம் உடலிலுள்ள கொழுப்பு கரைவதை துரிதப்படுத்தும். இதன் காரணமாகவே எடை குறைகிறது.

உணவில் சீரகத்தை சேர்த்துக்கொள்வதோடு, சீரக தண்ணீரை அருந்துவதையும் அநேகர் பரிந்துரைக்கிறார்கள். சீரகத்தை நீரில் ஊற வைக்கும்போது சவ்வூடு பரவல் காரணமாக, சீரகத்திலுள்ள சத்துகள் நீரில் கரைகின்றன. அதனால் நீர் மஞ்சள் நிறமாக மாறுகிறது. சத்துள்ள நீரை அருந்தினால் உடல் எடை குறைகிறது.

சீரகத்தில் 7 கலோரி ஆற்றல் மட்டுமே உள்ளது. இது மிகவும் குறைவான கலோரி அளவாகும். குறைவான கலோரி கொண்டதாக இருப்பதால் இதை அதிக அளவில் உண்ணலாம்; அருந்தலாம். பசியை ஆற்றும் சக்தியும் சீரகத்திற்கு உண்டு. பசி அதிகமாக இருக்கும்போது சீரகத் தண்ணீரை பருகினால், பசி அடங்கும்; தேவையற்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

எத்தனை முறை அருந்தலாம்?

உடலின் நச்சுக்களை அகற்றி, ஆரோக்கியத்திற்கு உதவுவதால் சீரகத் தண்ணீரை எத்தனை முறை வேண்டுமானாலும் அருந்தலாம். உங்கள் உடல் எடையையும், குறைப்பதற்கான உங்கள் தீர்மானத்தையும் பொறுத்து நீங்கள் அருந்தலாம். இதை அதிக முறை பருகினாலும் உடலுக்குத் தீங்கு விளையாது.
காலையில் எழுந்ததும் சீரகத் தண்ணீர் அருந்தினால் உடலிலுள்ள நச்சுகள் வெளியேறும். பகல் உணவுக்கு முன்பு அருந்தினால், பசி குறைந்து சாப்பிடும் அளவும் குறையும். இரவு சாப்பாட்டுக்குப் பின்னர் சீரக நீர் அருந்தினால் செரிமானம் நன்றாக நடக்கும். ஆகவே, அதிக அளவில் சீரக நீரை தயாரித்து அவ்வப்போது தொடர்ந்து அருந்தலாம்.

அருந்தும் முறைகள்

தேவையற்ற கொழுப்பை கரைப்பதற்காக நீங்கள் இதை அருந்தினாலும், தொடர்ந்து அருந்துவதற்கு சிரமமாக இருக்கக்கூடும். ஆனாலும் உங்கள் இலக்கிலிருந்து நீங்கள் விலகக் கூடாது. சீரக நீரின் சுவை அலுத்துப்போனால், சுவைக்காக மற்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

பட்டை தூள்: இலவங்க பட்டைக்கு உடல் எடை கூடுவதை தடுக்கும் பண்பு உண்டு. அழற்சிக்கு எதிராக செயல்படுவதோடு, உடலில் குளூக்கோஸின் அளவை சமநிலையில் காக்கும் இயல்பும் உண்டு. உடலுக்குத் தீங்கு செய்யும் நிலையற்ற அணுக்களை (ஃப்ரீ ராடிகல்ஸ்) அகற்றும் பண்பும் உண்டு. இரவு முழுவதும் சீரகத்தை நீரில் ஊற வைத்து, அருந்துவதற்கு முன்பு ஒரு சிறு கரண்டி இலவங்க பட்டை தூளை சேர்த்துக்கொள்ளலாம். அந்த சுவையும் அலுத்துப்போனால் இஞ்சி பொடி சேர்க்கலாம்.

எலுமிச்சை சாறு: சீரக நீரில் எலுமிச்சை சாறு சேர்ப்பது கொழுப்பின் அளவை சீராக்க உதவும். எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. அதன் காரணமாக அதிக கலோரி செலவாகிறது. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாகவும் எலுமிச்சை சாறு கலந்த சீரக நீரை அருந்தலாம்.

வெந்தயம்: சீரகம், வெந்தயம் இரண்டையும் நீரில் கொதிக்க வைத்து, அவற்றை வடிகட்டி பின்னர் மெதுவாக அருந்தலாம். இந்த நீர் உடலில் ஹார்மோன் அளவை சீராக வைக்க உதவுகிறது. செரிமான கோளாறுகளை குணப்படுத்தி, உடல் எடை குறைய உதவுகிறது.

சீரக நீர் அருந்துவதால் மட்டுமே உடல் எடை குறையும் என்று நினைக்கக்கூடாது. அதற்கேற்ற உணவு பழக்கத்தை கடைபிடிப்பதோடு, உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டியது அவசியம்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?
/body>