ஒன்பிளஸ் ரெட் கேபிள் லைஃப் லாயல்டியில் இணைவோருக்கு 6 டிபி கிளவுட் ஸ்டோரேஜ் பெறும் வசதி கிடைக்கும் என்ற அறிவிப்புடன் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனையாகி வருகிறது. எஸ்பிஐ கிரடிட் கார்டு மூலம் வாங்குவோருக்கு ரூ.4,000/- தள்ளுபடி மற்றும் குறிப்பிட்ட வகை அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகள் மூலம் வாங்குவோருக்கு ரூ.5,000/- வரை தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளுடன் இது சந்தைக்கு வந்துள்ளது.
ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9ஆர் மற்றும் ஒன்பிளஸ் வாட்ச் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டபோது ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகமானது. தற்போது அமேசான் மற்றும் ஒன்பிளஸ்.இன் தளங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பிளஸ் விற்பனையகங்களிலும் இது கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
சிம்: இரட்டை நானோ சிம்
தொடுதிரை: 6.7 அங்குலம் கியூஎச்டி+ (1440X3216 பிக்ஸல் தரம்); ஃப்ளூயிட் திரை 2.0 AMOLED
ரெஃப்ரஷ் விகிதாச்சாரம்: 1 Hz முதல் 120 Hz
இயக்கவேகம்: 8 ஜிபி மற்றும் 12 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி மற்றும் 256 ஜிபி (ரெட் கேபிள் லைஃப் மூலம் 6 டிபி கிளவுட் ஸ்டோரேஜ் பெறும் வாய்ப்பு)
செல்ஃபி காமிரா: 16 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 48 எம்பி ஐஎம்எக்ஸ்789 + 50 எம்பி ஐஎம்எஸ்766 + 8 எம்பி + 2 எம்பி (குவாட் காமிரா)
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 888 SoC
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11; ஆக்ஸிஜன்ஓஎஸ் 11
மின்கலம்: 4500 mAh
சார்ஜ்: வார்ப் சார்ஜ் 65டி மற்றும் வயர்லெஸ் வார்ப் சார்ஜ் 50
5ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எஃப்சி, யூஎஸ்பி டைப்-சி போர்ட் வசதியுடன் 8 ஜிபி + 128 ஜிபி ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.64,999/- விலையிலும், 12 ஜிபி + 256 ஜிபி ஸ்மார்ட்போன் ரூ.69,999/- விலையிலும் விற்பனையாகிறது.