பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் என்ன பயன்..?

Apr 29, 2018, 12:45 PM IST

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் சாப்பிட்டால், பிரட்டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.

பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது. அதனால் தயவு செய்து பழங்களை  வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன் சாப்பிட வேண்டும். பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக்  காரணமாகிறது.

நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவையெல்லாம், வெறும்  வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால் தவிர்க்கலாம். 

நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, புதிதான பழங்களை தேர்ந்தெடுத்து அருந்துங்கள். டின், பாக்கட் மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட  பழங்கள் மற்றும் பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது.

சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம். பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள். ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது. சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே  கிடைக்கிறது.

You'r reading பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் என்ன பயன்..? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை