வைட்டமின் பி சத்து நிறைந்த மீன் பஜ்ஜி ரெசிபி

Apr 29, 2018, 13:18 PM IST

“ஓமேகா 3” என்ற ஒரு வகை ஆசிட் மீனில் உள்ளது. இந்த ஆசிட் உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க பெரிதும் உதவுகிறது. அந்த வகையில் மீன் கொண்டு சுவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான பஜ்ஜி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:
முள் நீக்கிய மீன் அரை கிலோ
மிளகாய்த் தூள் ஒரு தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் அரை தேக்கரண்டி
சோள மாவு ஒரு கை அளவு
மைதா மாவு இரு கை அளவு
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
எலுமிச்சை பழச் சாறு தேவையான அளவு

செய்முறை :
மைதா மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய்த் தூள் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.

எண்ணெய் காய்ந்ததும் மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதோ இப்போது சுவையான மீன் பஜ்ஜி தயார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading வைட்டமின் பி சத்து நிறைந்த மீன் பஜ்ஜி ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை