வெயில் காலம் என்பது எவ்வளவுதான் உங்களுக்குப் பிடித்திருந்தாலும், இப்போதுதான் சருமம் சார்ந்த பிரச்னைகளும் அதிகம் தாக்கும். அதிக வெப்பநிலை, வெப்பக் காற்று, ஈரபதமற்ற வானிலை என இந்தப் பருவ காலத்தில் உங்கள் உடல் நினைக்க முடியாத வகைகளில் பாதிப்புக்கு உள்ளாகும்.
இதற்கான ஏழு நிவாரண வழிகள்!
1. வெயில் காலத்தில் அடிக்கடி முகம் கழிவு வந்தாலே முகத்தில் உள்ள தூசு, எண்ணெய் பிசுபிசுப்பு ஆகியவை நீங்கிவிடும்.
2. உடல் துர்நாற்றம் சம்மரில் அதிக வியர்வை சுரப்பதால், அதிக உடல் துர்நாற்றமும் வீசும். இதை சரிசெய்ய சிறந்த வழி அடிக்கடி குளிப்பதே. ஆன்டி-பேக்டீரியா தன்மை கொண்ட சோப்பை பயன்படுத்துவது நல்லது.
3. வெயிலில் செல்வதற்கு முன்னர் பாடி லோஷனையோ, பெட்ரோலியம் ஜெல்லி அல்லது வாசிலின் போன்றவைகளைத் தடவிக் கொள்வது பயன் தரும்.
4. வெயில் காலம் வந்தால், கூடவே வெப்பக் காற்றும் சேர்ந்து வரும். இது நம்மில் பலரையும் எரிச்சல் அடையச் செய்யும். இதைப் போன்ற வெப்பக் காற்றால் ஏற்படும் முடி சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்ள கன்டிஷனர் அல்லது சீரம் உள்ளிட்டவையை பயன்படுத்துவது சாலச் சிறந்த்து.
5. அதிக உஷ்ணம், அதீத வியர்வை போன்றவற்றால் வெயில் காலத்தின் போது வியர்க்குரு சாதரணமாக வரும். ஐஸ் பேக் மற்றும் ஆன்டி- பேக்டீரியல் பௌடரை சருமத்தில் தடவுவதின் மூலமும் வெர்க்குருவை விரட்டியடிக்கலாம்.
6. முகத்தில் எண்ணெய் வடிவதுதான் வெயில் காலத்தின் போது பெரும் பிரச்னையாக இருக்கும். ஆனால், வறட்சியான தோல் இருப்பவர்களுக்கு, மாய்ஸ்ச்சரைசர்ஸர்கள் பயன்படுத்துவதன் மூலம் வறட்சித்தன்மையை கட்டுக்குள் வைக்கலாம். நிறைய நீர் அருந்துவது பலன் தரும். கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதும் வறட்சியை எதிர்கொள்ள துணை நிற்கும்.
7.சருமம் கருமைக்கு தக்காளி, கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு பயன்படுத்தி உடலில் தடவி குளித்து வந்தால், சருமத்தின் பொலிவை மீட்டெடுக்கலாம்.