கிர்ணி பழம் எனும் சூப்பர் ஹீரோ !

Sep 9, 2018, 17:39 PM IST

எல்லோருக்கும் பழக்கப்பட்ட மற்றும் ஏழை மக்களும் விரும்பி உண்ணக்கூடிய பழம்தான் முலாம் பழம்.இதை கிர்ணி பழம் என்றும் பெரும்பாலானோர் அழைப்பர்.

இதில் அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவற்றை “வைட்டமின்களின் சேமிப்புகலம்” என்றும் அதோடு மட்டுமின்றி அதிக நற்பலன்கள் கொண்டுள்ளதால் இவற்றை “பழங்களில் ஹீரோ” என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறது.

கோடைக்காலத்தில் மிக அதிகமாக கிடைக்கும் இப்பழத்தில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் இதனை ஜுஸ் செய்து பருகும்போது நமது உடல் வெயிலை தாங்கும் அளவிற்கு குளிர்ச்சி அடைந்து உடலில் நீரின் அளவை சமன்செய்து தேவையில்லாத நீரை வெளியேற்றுகிறது.

நிக்கோட்டின் பாதிப்பிலிருந்து நுரையீரலை மிக விரைவாக பாதுகாத்து, புகைப்பழக்கத்தினை நிறுத்தக் கூடிய அரிய குணம் கொண்ட பழம்.
டயாப்பிடிக்ஸ் நோயாளிகளும் சாப்பிடக்கூடிய பழம். இது சர்க்கரையின் அளவை கன்ர்ட்ரோலில் வைக்கிறது அதோடு கொலஸ்டிரால் இதில் துளிக்கூட இல்லை. நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது. அல்சர் நோயிற்க்கு மிகச் சிறந்த மருந்தாகவும் உள்ளது.

சிறுநீரகத்தில் உள்ள கல்லையும் கரைக்கும் தன்மைக் கொண்டது. தூக்கமின்மையால் அதிகப் பேர் பாதிக்கின்றனர் அவர்களுக்கான சிறந்த மருந்து தான் முலாம் பழம். இப்பழம் உடலில் உள்ள நரம்பு மற்றும் சதையை ரிலாக்ஸ் செய்து தூக்கத்தினை தருகிறது. இதில் உள்ள அடினோசின் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. முலாம் பழத்தை தினமும் சாப்பிட்டுவர இம்மாதிரியான நோய்களிலிருந்து உடம்பைப் பாதுகாக்கலாம்.

அனைத்து நோய்களுக்கும் தீர்வாகவும், கோடை வெயிலைத் தணித்தும் அனைவரும் உண்ணக்கூடிய எளிமையான பழம் உண்மையில் சூப்பர் ஹீரோதான்!.

You'r reading கிர்ணி பழம் எனும் சூப்பர் ஹீரோ ! Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை