ரிப் கரண்ட்(Rip Current) என்னும் காலன்...

Sep 9, 2018, 18:14 PM IST

கடற்கரையிலிருந்து ஒரு வலுவான நீரோட்டம் உள் நோக்கி இழுக்கப்படும் நிகழ்வை ரிப் கரண்ட் என்று சொல்வோம். இவற்றின் அகலம் சுமார் 45 மீட்டர் அதாவது 150 அடி இருக்கும் குறைந்தபட்சம் 9 மீட்டர் (30 அடி) வரை இருக்கும்.

இந்த ரிப் கரண்ட் கடற்பரப்பின் மீது 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு காணப்படும். இயற்கை சீரழிவுகளில் இவையும் ஒன்று.

சில நேரங்களில் (Undertow) எனப்படும் அடிமட்ட இழுப்பும் ரிப் கரண்டும் ஒரே மாதிரி இருக்கும் ஆனால் இவை இரண்டும் வேறுபட்டவை…Undertow கடலின் அடிப்பகுதியில் இருந்து பொருட்களை உள்ளே இழுக்கும் ஆனால் ரிப் கரண்ட் கடலின் மேற்ப்பகுதியில் செயல்பட்டு பொருட்களை இழுத்துச் செல்லும்.

ரிப் கரண்ட் பற்றிய உண்மைகள்

ரிப் கரண்டின் வேகம் மாறக்கூடியது. இவற்றின் சராசரி வேகம் நொடிக்கு 1-2 அடி தூரமும், பெரிய சீரழிவை ஏற்படுத்தும் போது இதன் வேகம் நொடிக்கு 8 அடி வரை இருக்கும் என கூறுகின்றனர். இதில் ஒலிம்பிக் வீரரால் கூட நீந்த முடியாது.

ஏன் ரிப் கரண்ட் ஆபத்தானது?

  1. இவைகள் மனிதர்களை கடலின் மேற்பரப்பிலிருந்து இழுக்கின்றன.
  2. ரிப் கரண்டின் வேகம் நிமிடத்திற்கு நிமிடம் மாறுவதால், இதன் வேகம் கணக்கிட முடியாமல் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
  3. எவ்வளவு பெரிய நீச்சல் வீரரரும் இதன் பிடியிலிருந்து தப்பிக்கமுடியாது.

ரிப் கரண்டால் சூழப்பட்டால் என்ன செய்வது?

  1. அமைதியாக இருங்கள்.
  2. அந்த அலையை எதிர்த்து சண்டைப் போடாதீர்கள்.
  3. ரிப் கரண்டிலிருந்து விடுபட, குறிப்பிட்ட கோணத்தில் அதன் பக்கவாட்டின் எதிர்திசையில் நீந்தி பிறகு கடற்கரையை நோக்கி நீந்துங்கள்.
  4. உங்களால் தப்பிக்க முடியாத நிலையில், கடற்கரையின் மேல் உள்ளவர்களை உதவிக்கு அழையுங்கள்.

ரிப் கரண்ட் இருப்பதற்கான அறிகுறிகள்:

  1. தண்ணீரின் மேல் அலை அலையாக சுழல் ஏற்படுதல்.
  2. தண்ணீரின் கலர் மாறுதல்
  3. நுரை, கடற்பாசி அல்லது குப்பைகள் கடலின் மேல் சுழலுதல்.
  4. கடல் அலையில் இடைவெளி ஏர்ற்படுதல்.

பாதுகாப்பு குறிப்புகள்:

  1. முதலில் எப்படி நீந்துவது என்பது தெரிய வேண்டும்.
  2. தனியாக கடற்கரையில் நீச்சல் அடிக்காதீர்கள்.
  3. அதிக பாதுகாப்பிற்கு Lifeguard பக்கத்தில் நீச்சல் அடியுங்கள்.
  4. Lifeguard சொல்லும் அனைத்து விதிகளையும் பின்பற்றுங்கள்.
  5. எந்த நேரமும் விழிப்புடன் இருங்கள்.
  6. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கடலுக்குள் செல்லாதீர்கள்.

இவை அனைத்தையும் பின்பற்றுங்கள் கடலுக்குள் செல்லும் போது..

You'r reading ரிப் கரண்ட்(Rip Current) என்னும் காலன்... Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை