குழந்தைக்கு புற்றுநோயைக் கொடுக்கும் நம் பெற்றோர்கள்..

Advertisement

எல்லோருக்கும் நன்கு அறிந்தது சாந்துப் பொட்டு, மற்றும் குங்குமப் பொட்டு. இது என்னடா? சகோப் பொட்டு என்று தானே யோசிக்கிறீர்கள்? சகோ என்பது ஜவ்வரிசியாகும். ஜவ்வரிசியினால் உருவாக்கப்படும் பொட்டுதான் சகோப் பொட்டு.

பொட்டு,  திலகம் எனவும் அழைக்கப்படுகிறது. நாம் குழந்தையாய் பிறந்த காலம் முதல் முதியவராகும் வரை அனைவரும் விரும்பி அணியக்கூடிய ஒன்று தான் பொட்டு. குழந்தை பிறந்த உடன் திஸ்டியை கழிக்க பொட்டு வைத்து  அழகு பார்க்கிறோம். ஆனால் அந்தப் பொட்டு நல்லதா என துளிக் கூட யோசிப்பதில்லை.


அந்த அளவிற்கு நாம் முக்கியத்துவமும் கொடுப்பதில்லை, அது நன்மையானதா? அல்லது தீமையானதா? என நினைப்பதும் இல்லை. கடைகளிலிருந்து வாங்குகிறோம் அதனை நெற்றியில் வைக்கிறோம். நாம் உபயோகிக்கின்ற அனைத்து பொட்டுக்களும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது. இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

குழந்தைகளுக்கு செயற்கைப் பொட்டினை உபயோகிக்கும் போது அவர்களுக்கு அதிக அளவிலான ஸ்கின் அலர்ஜியை ஏற்படுத்துகிறது. செயற்கைப் பொட்டினில் கெமிக்கல் கம் கலப்பதால் குழந்தையின் தோல் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

செயற்கைப் பொட்டினில் லெட், ஸிங்க் மற்றும் தொழில்நுட்ப மை சேர்ப்பதினால் குழந்தைகளுக்கு அரிப்பு, ராஷ்சஸ் அதற்கும் மேல் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் காரணமாய் உள்ளது.

இவற்றிற்கு முற்று புள்ளியாக எளிதில் வீட்டில் செய்யக்கூடிய இயற்கை பொட்டுதான் சகோப் பொட்டு.இது குழந்தைகளுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படுத்தாது.

இந்தப் பொட்டு தடிமனாகவும், அடர்ந்த சிகப்பு நிறமும் உடையது. இதை உபயோகிக்கும் முறையும் எளியது. இப்பொட்டினை சுத்தம் செய்ய எந்த கஷ்டமும் பட தேவையில்லை. நெற்றியிலிருந்து உரித்து எடுக்கலாம்,இதனால் எந்த வலியோ, பாதிப்போ ஏற்படாது.

செய்முறை:

ஜவ்வரிசி -    ½ கப்

தண்ணீர்  -    1/3 கப்

  1. முதலில் ஜவ்வரிசியை ஒரு கனமான பாத்திரத்தில் வருக்கவும்.
  2. ஆரம்பத்தில் வறுக்கும்போது வெள்ளை நிறத்தில் இருக்கும். மீடியம் ப்ளேமில் வைத்து தொடர்ந்து வறுக்க கலர் மாறத் தொடங்கும்.
  3. சிறிது நேரத்தில் அடர் கருப்பு நிறமாக மாறும்.
  4. இப்போது தண்ணிர் சேர்த்து, வேக வைக்கும்போது இது அடர்ந்த பசைப்போல் மாறும்.
  5. இந்த பசையை ஆறவிட்டு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் சேமித்து உபயோகிக்கலாம்.

வெறும் அரைமணி நேரத்தில் இயற்கையான மற்றும் பாரம்பரிய பொட்டு தயார். எந்த பயமும் இன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உபயோகிக்க கூடிய சிறந்த பொட்டு இதுதான்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?
/body>