உலகில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாரபட்சமின்றி பாதிக்கக்கூடிய ஒரே சொல் மன அழுத்தம். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு மதிப் பெண் பற்றிய கவலையில் மன அழுத்தம். வீட்டு பெண்களுக்கு குடும்பத்தை பற்றிய மனக்கவலை, தொழிலதிபர்களுக்கு எல்லையில்லா மனக்கவலை தன் தொழிலைப் பற்றி நினைத்து. இதுபோன்று அனைவரது வாழ்கையிலும் நிம்மதி இல்லாமல் பெரும் மனகவலையுடன் இருக்கும் இந்நிலையில் எந்த ஒரு செலவுமின்றி கஷ்டமும் இன்றி சுலபமாக உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய ஆசனம்தான் இது.
உங்களது படுக்கையில் உட்கார்ந்து கொண்டு குறுக்கு கால் போட்டு செய்யும் ஒரு எளிய நிலை ஆகும். சுஹா என்றால் சந்தோஷம் என்று பொருள்.
செய்முறை :
முதலில் உங்கள் கால்களின் கோணங்கள் சரியாக இருக்குமாறு குறுக்கு கால் போட்டு உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
மெல்ல கண்களை மூடிக் கொண்டு காற்றில் கேட்கும் இசையை போல உங்களது மூச்சை மெதுவாக இழுக்க வேண்டும்.
மூச்சை நீங்கள் உள்ளே இழுத்தல் உங்கள் தண்டுவட நீட்சிக்கும், வெளியிடுதல் தண்டுவடம் ரிலாக்ஸ் ஆவதற்கும் உதவுகிறது.
20 தடவை மூச்சை இழுத்து வெளியிடுவதை செய்ய பயன்கள் :
உங்களது இடுப்பு எலும்புகள் நெகிழ்வுத்தன்மை பெறுகிறது.
தண்டுவடம் நீட்சியடைகிறது.
இதை தினமும் காலையில் செய்தால் உங்களது மனஅழுத்தம் குறைந்து அமைதி மற்றும் சந்தோஷம் மனதில் ஏற்படும்.