தூக்கம் இல்லாமல் மனச்சோர்வுடனும், உடல் சோர்வுடன் இருப்பவர்களுக்கு இந்த யோகாசனம் சிறந்த மருந்து.
எந்த இயக்கமும் அற்ற நிலைதான் சாந்தி ஆசனம் ஆகும். இதற்கு சவாசனம் என்ற பெயரும் உண்டு. கால்களை நீட்டி நிமிர்ந்து படுக்க வேண்டும். கைகள் தொடையில் இருந்து சற்றுத் தள்ளி இருக்க வேண்டும். உள்ளங்கைகளை மேல் நோக்கியபடி வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொள்ள வேண்டும.
கால்களை 2 அடி அகலத்தில் விரித்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஆழமாக சுவாசிக்கலாம். பின்னர் மெல்ல மெல்ல சாதாரண சுவாச நிலைக்கு வர வேண்டும். உடம்பு முழுவதையும் இறுக்கமாக இல்லாமல் நிலைக்கு வைத்துக் கொள்வது முக்கியமானது.
கால்விரல், பாதம், கணுக்கால், குதிகால் தசை, மூட்டுகள், தொடை, இடுப்பு, வயிறு, முதுகு, மார்பு, இதயம், கை, முன்னங்கை, விரல், முகம், கண், தலை, மூளை என்று ஒவ்வொரு பாகமாக நினைத்து ஒவ்வொன்றுக்கும் ஒய்வு, ஒய்வு என்று மனதுக்குள் சொல்லி ஒய்வு எடுக்க வேண்டும்.
இந்த ஆசனத்தை செய்து முடிக்கும் போது முதலில் கால் விரல்களையும், காலையும் சற்று அசைத்து விட வேண்டும். கைவிரல்களை மடித்து நீட்டி உடலை ஒரு பக்கமாக சாய்த்து நிதானமாக எழுந்தருக்க வேண்டும். இது தான் சாந்திய ஆசனம் செய்யும் முறை ஆகும். எந்த ஆசனம் செய்தாலும் முடிவில் சாந்திய ஆசனத்தை செய்து முடிப்பது நல்லது.
உடல் சோர்வு அடையும் போது எல்லாம், சோர்வை போக்குவதற்கு இந்த ஆசனத்தை செய்யலாம். மன சஞ்சலத்தை போக்குகிறது. ரத்த அழுத்த நோயை குணமாக்குகிறது. தளர்ச்சியை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. தூக்கமின்மையை சரி செய்கிறது.