உலகைச் சுற்றும் போட்டி: இந்திய கடற்படை வீரர் நடுக்கடலில் தத்தளிப்பு

by Isaivaani, Sep 24, 2018, 08:50 AM IST

கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் போட்டியில் பங்கேற்ற இந்திய கடற்படை வீரர் மோசமான வானிலை காரணமாக நடுக்கடலில் தத்தளித்து வருகிறார். இவரை மீட்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் கோல்டன் குளோப் சர்வதேச பந்தயம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில், இந்தியா சார்பில் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி பங்கேற்றார்.

இவர், துரியா என்ற படகு மூலம், கடந்த 84 நாட்களில் 10,500 நாட்டிக்கல் மைல் கடந்து, தெற்கு இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென புயல் தாக்கியது.
இதனால், டோமி மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். சுமார் 14 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்ததாலும், காற்று பலமாக வீசியதாலும், மோமியால் படகை இயக்க முடியவில்லை.

இதுகுறித்து, டோமி இந்திய கடற்படைக்கும், பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும் தகவல் தெரிவித்தார். இதன்பிறகு, மொரீஷியஸில் இருந்து இந்திய கடற்படை விமானம் தேடியதன் எதிரொலியாக படகு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனுடன், இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் ஒன்றும் டோமியை மீட்க விரைந்துள்ளன.

You'r reading உலகைச் சுற்றும் போட்டி: இந்திய கடற்படை வீரர் நடுக்கடலில் தத்தளிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை