சர்க்கரை நோயால் குடும்ப வாழ்க்கை பாதிக்கபடுமா.?

Can family life be affected by diabetes

by Vijayarevathy N, Oct 22, 2018, 21:08 PM IST

சர்க்கரை நோய் இப்பொழுது வாடிக்கையான நோய் ஆகிவிட்டது. சர்க்கரை நோய் உள்ளவர்களால் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டா? இல்லையா? என சந்தேகம் பலருக்கும் ஏற்படும். ஆனால் உண்மையில் சர்க்கரை நோயால் தாம்பத்ய வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படுமா? இல்லையான என பார்ப்போம்.

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டு விடுகிறது.நடுத்தர வயதைத் தொட்ட பல ஆண்-பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குறையத் தொடங்குவதாகக் கவலைபடுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகிறது.

இதனால் விறைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், உடலுறவுக்கான உணர்ச்சி குறைந்துவிடுதல், பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொள்ளும் சுரப்பி நீர் குறைந்து பிறப்புறுப்பு வறட்சியடைதல், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது மாறுபாடுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகின்றன.

பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாதவர்களில் 50 விழுக்காட்டினர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்மைக் குறைவுக்கு ஆளாகிறார்கள். ஆண்களுக்கு விறைப்புத் தன்மையை ஏற்படுத்தும் காரணிகள் எல்லாம் சர்க்கரை வியாதியின்போது சிதைக்கப்படுகிறது என்பது பொதுவான விஷயம்.

ஆனால் ஆண்கள் கூடுதலாக புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன இறுக்கம், வேலைச்சுமை, பதற்றம், அதிக சொகுசாக வாழ்தல் போன்ற பல காரணிகளுடன் அதிக தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஓய்வில் அதிக நாட்டத்தைக் காட்டுகிறார்கள்.

You'r reading சர்க்கரை நோயால் குடும்ப வாழ்க்கை பாதிக்கபடுமா.? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை