ஆரோக்கியம்: மறுவாழ்வை பெற சிவலிங்க முத்திரை

Health: Shiva Linga Mudra For rehabilitation

Oct 28, 2018, 09:21 AM IST

முத்திரைகளில் மிகவும் சிறப்பானது சிவலிங்க முத்திரையாகும். இம்முத்திரையை செய்யும் போது நேர்மறை எண்ணங்கள் அழிக்கப்பட்டு மனதை ஒருநிலைப் படுத்தி வாழ்வில் மேலும் மேலும் முன்னேற வழிவகை செய்கிறது.

சிவலிங்க முத்திரையில் லிங்க  வடிவத்தை மட்டுமின்றி தனக்குள் அனைத்து வடிவங்களையும் அடக்கியுள்து. இவை ஆராய்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மாபெரும் சக்தியையும், பல்வேறு ரகசியங்களையும் பொதிந்து வைத்துள்ளது. இந்த சிவலிங்க வடிவில் காணப்படும் சிவலிங்க முத்திரை அனைத்து நல்ல பலன்களையும் அளிக்கவல்லது.

செய்யும் முறை:

முதலில் ஆசனத்தில் அமர்ந்து, இடது கையை கிண்ணம் வடிவம்  போல் லேசாகக் குழித்து, உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு, தொப்புள் பகுதிக்கு நேரே வைக்க வேண்டும். அதன்மேல், மற்றொரு கையை நான்கு விரல்களையும் மூடிய நிலையிலும் கட்டை விரல் நேராக இருக்கும்படியும் வைக்க வேண்டும் கண்களை மூடி அமர்ந்து கொள்ளவும். ஒருநாளைக்கு இருமுறை என 5 நிமிடங்கள் இதைச் செய்யலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.

பயன்கள்:

இச்சிவலிங்க முத்திரை செய்யும்போது, நமது உடலில் பஞ்ச பூதங்களும் அதனதன் அளவீடுகளில் நிலைத்து, ஆக்க சக்தியை வெளியிடுகின்றது.

உயிரோட்டத்தின் மொத்த வடிவமாக நமது உடல் மாறுவதால் தீய எண்ணங்கள், அவநம்பிக்கை போன்ற எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் உண்டாகிறது.

உடலில் உள்ள சூட்டை நீங்கினால், மரணம். அதாவது, சிவம் உடலிலிருந்து அகன்றுவிட்டால் சவம்! உடலில் உள்ள குளிர்ச்சி என்னும் கபத்தை வெளியேற்றி, உஷ்ணத்தைத் தக்க வைக்க சிவலிங்க முத்திரை உதவும். எந்தவித நோயாக இருந்தாலும், விரைவில் விடுபட வேண்டுமென்றால் சிவலிங்க முத்திரையை உட்கார்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ செய்யலாம். குளிர், நடுக்கம், அவநம்பிக்கை, சோர்வு ஆகியவை பறந்தோடும்.

You'r reading ஆரோக்கியம்: மறுவாழ்வை பெற சிவலிங்க முத்திரை Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை