ஒரு ஆரோக்கியமான உடல் நிலை வேண்டுமென்றால் நல்ல ஊட்டசத்துமிக்க உணவு வகைகள், உடற்பயிற்சி மற்றும் சரியான முறையில் தூங்கினால் போதும். தொடர்ந்து தூங்காமல் இருந்தால் சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் ஏற்படுத்திவிடும்.
ஒரு மனிதன் குறைந்தது 5 மணி நேரம் தூங்க வேண்டும் அல்லது அதிகமாக 9 மணி நேரம் தூங்க வேண்டும். இப்படி தூக்கும் போது உடல் பாதிப்புகள் ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம். குறைந்த தூக்கத்தால் இதய நோய்கள் மற்றும் வலிப்பு நோய்கள் போன்றவை ஏற்பட காரணமாக அமைகிறது.
அதோடு குறைந்த அளவு தூங்கும் போது மார்பக புற்று நோய், குடல் புற்று நோய் மற்றும் புரோஸ்டேட் புற்று நோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
குறைவான தூக்கம் உங்கள் மூளையின் செயல்திறனை பாதித்து சரியாக சிந்தனை செய்யவிடாமல் தடுக்கிறது.
தூக்கமின்மை உங்கள் நினைவாற்றலை பாதிக்கிறது. தூக்கமின்மை நமது மூளையின் செயல்திறனை குறைத்து விடுகிறது.
சரியான தூக்கமில்லாமல் இருப்பது உங்கள் உடலுறவுக்கான ஆர்வத்தை குறைத்துவிடும். ஒரு ஆண் ஒரு வாரத்திற்கு சரியான தூக்கமில்லாமல் இருந்தால் அவரின் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் குறைந்து விடுகிறது.
சரியான தூக்கமின்மை நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து சர்க்கரை நோய் ஏற்பட வைக்கிறது.
தூக்கமின்மை பிரச்சினை உங்கள் அழகையும் பாதிக்கிறது. சரியான அளவு தூங்காமல் இருப்பது வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
போதிய அளவு தூக்கம் இல்லாமல் இருப்பது உங்கள் ஆற்றல் குறைவு, சோர்வு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உறவுகளிடையே பல சிக்கல்களை உண்டு பண்ணுகிறது.